புதன், 25 நவம்பர், 2020

வாழ்த்துக்கள் செய்வீர் மேதகுதனை.!

தமிழ் மூவேந்தர் கொடி வீழ்ந்த பின்னர்
ஒரு சரித்திர மீழ்ச்சிகாண
புலிக்கொடி ஏற்றினான் தனையனிவன்;
தமிழன் பெயர் முரசறைந்து இராவண சேனையோடு.!
வாழ்த்துக்கள் செய்வீர் மேதகுதனை.!

முக்கடல் சங்கம ஆழிகளை முறுமுறுது
பாயிந்தது இவன் கடல்ப்படைகள்;
அதனாலோ என்னவோ ஆழ்கடல் - அன்று
அமைதியாய் உறங்கியது உற்றவனின் கையோச்சிட.!
வாழ்த்துக்கள் செய்வீர் மேதகுதனை.!

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
ஆனாலிவன் இலட்சியமது
புலிக்கும் சொந்தச்சிறகு முளைத்து
வான் முட்டக்கண்டது உலக அரசுகள் மிரள.!
ஆக இவனே புட்பக விமானந்தனை
புலிப்படை கொண்டு கட்டிய மாரீசன் மருகன்.
வாழ்த்துக்கள் செய்வீர் மேதகுதனை.!

உயிரைவிட.. தன்மானமும்,
தன்னின சுதந்திரமும் மேலென்று
அதுவரை வரிகளில் படித்திருந்த மாந்தர்தமை;
இவன்தான் வலிகொணர்ந்து
கரும்புலிகளாய் வடிவமைத்தான்.
வாழ்த்துக்கள் செய்வீர் மேதகுதனை.!

இவன் வீழ்ந்தான் என்று எதிரியும்;
என்தலைவன் சிரஞ்சீவி,
நாம் அழுதால் தாங்கொனாது மீழ்வார்
என்று - தமிழரும் உறுதிகொள்ள.!!
என்னுரையது.. "அவனவன் உறுதிப்படும்
ஆண்டவனை, கண்காணாது உளார்
என்று - உணரும் உணர்வில்
இன்றும் மேதகு வே பி அவர்கள்
நமக்குள் வாழ்கிறார்.
வாழ்த்துக்கள் செய்வீர் மேதகுதனை.!

வரிகள்: 
சிறி. ஆரோன் _(ஈழத்தூரான்)_

சனி, 20 ஜூன், 2020

அப்பா நீங்கதான் என் நாயகன்

அப்பா நீங்கதான் - நான்
கர்ப்பத்தில் இருக்கும் போதே
பெயர் சூட்டி மகிழ்ந்தீங்க..
                    🧔
பேசக் கத்துக் கொடுத்தீங்க- நான்
சாப்பிட பிசைஞ்சு தீத்திநீங்க;
நடக்க கைபிடித்து பழக்கிநீங்க..
                    🧔
எழுதப்படிக்க சொல்லித்தந்தீங்க;
எதுக்குமே எனைக் கண்டிக்காம 
பக்குவமாய் அரவணைத்து காத்தீங்க.!
                    🧔
நீங்க.. நீங்கதான் - எனக்கு
அப்போவும், இப்போவும், எப்போவும்..
மாறாத ஒரே நாயகன் அப்பா.!
                🧔🧔🧔
வரிகள் ஸ்ரீ ஆரோன்

வெள்ளி, 19 ஜூன், 2020

அறிவின் தரவரிசை...!!


"தமிழர்களே.. 
நம் தமிழ்மொழி ஒரு மொழி மட்டுமல்ல
இந்த உலகத்தில் மனிதனின் சுவட்டின்
ஒரேயொரு சான்றாதாரம்"

உலகில் உள்ள உயிரினங்களை,
அவற்றின் அறிவின் செயல்திறன் கொண்டு
ஆறு வகைகளாக நவீன உலகின் அறிவியல் பிரிக்கிறது

ஒரு காலத்தில் மரம் அஃறிணையாக பார்த்த - உலகம்
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று 1927ல்
மேதை ஜெகதீஷ் சந்திரபோஸ் உலகிற்கு அறிவித்து
நிலைமை மாறியது 

முடிவில்.. உலக உயிரினங்களை செயல்திறன்
அடிப்படையில் ஆறு பிரிவாக பிரித்தது அறிவியல்.

உடலால் உணர்வது ஓரறிவு
மரம், செடி, கொடி, புல், பூண்டு இவை
தங்கள் உணர்விற்கு எதிர்வினை ஆற்றாது.

உடல், நாக்கால் உணர்ந்தால் ஈரறிவு
மீன் போன்ற நீந்தும் கடல்வாழ்
உயிரிகள் வகையறாவில்.

உடல், நாக்கு, மூக்கு ஆகியவற்றால்
உணரமுடிந்தால் மூன்றறிவு ஊர்வன
பட்டியலில் எறும்பு, கரையான், அட்டை போன்றவை.

உடல், நாக்கு, மூக்கு, கண்ணால்
உணரத் திறன் கொண்டவை நான்கறிவு 
பூச்சியினங்கள் மேற்படி குடும்ப மெம்பர்கள்.

உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகியற்றால்
உணரமுடிந்தால் ஐந்தறிவு
விலங்குகள், பறவைகள் இதில்.

உடல், நாக்கு, மூக்கு, கண், காது, பகுத்தறியும் மூளை
ஆகிய ஆறு உறுப்புகளை பயன்படுத்தினால்
ஆறறிவு மனிதர்கள்  இப்பட்டியலில். 

இதெல்லாம் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு - என்று 
உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது - ஆனால்
ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான 
தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாக
பிரித்து கொடுத்திருக்கிறார்கள்

அன்றே தமிழும், தமிழர்களும் அறிவுத்திறனில்
அறிவியல் திறனில் கொடிகட்டி பறந்திருக்கிறார்கள் 
என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.

‘‘புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ 
‘‘நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ 

‘‘சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ 
‘‘நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’  

‘‘மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ 
‘‘மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ 

தமிழின் தொன்மைதனை
வெளிநாட்டு ஆய்வாளர்கள்
பார்த்து பிரமித்து - உலகின் 
மிகத் தொன்மையான மொழி
தமிழ் என்று சத்தியமடிக்கிறார்கள்

உலக மொழிகள் ஆய்வு செய்த 
அமெரிக்க மொழியியல் அறிஞர் 
நோம் சோம்ஸ்கி ‘‘உலக மொழிகளில் 
மூத்த முதல்மொழி தமிழாகத்தான்
இருக்க வேண்டும்.!’’ என்று முடிக்கிறார்.!

"உன் பிள்ளைகளாய்
நாங்கள் பிறப்பெடுக்க - என்
மாதவம் செய்தோம் தமிழ்த்தாயே"

வரிகள் ஸ்ரீ ஆரோன் 

திங்கள், 15 ஜூன், 2020

புரட்சிப்பறை இன்று அமெரிக்காவில்


தொல்குடித் தமிழர்களின்
பிறப்பில் ஆனந்த இசை;
இறப்பில் வழியனுப்பும் ஒலி;
களிப்பின் தருணங்களில்_
ஆர்ப்பரிப்பின் ஓசை;
துதிப்பில் ஆசீர்வாத நாதம்;
தகவல் பகிரவும் இதுதன் சத்தம்..
சங்கவரலாற்று வாழ்வியலில்
நீர்க்கமற நிறைந்த பறை .!

இதுகாண் குறிஞ்சிப்பறை;
முல்லைப்பறை; மருதப்பறை;
நெய்தற்பறை; பாலைப்பறை - எனும்
ஐந்திணையிலும் முழக்கிய
பறையிசைக் கருவியிதை
ஏழாயிரம் ஆண்டுகள் தாண்டிய
தொன்மையின் தொல்காப்பியம்  சான்றுபகர்கிறது..

நம் தமிழ் பண்பாட்டு; பாரம்பரிய பறையிசையின் வீரியம் - இன்று
கறுப்பின ஒடுக்குமுறை வெற்றுமைக்கு
உறவுபூண்டு கலவரங்களால்
குருதியாற்றில் மிதக்கும் ஐக்கியமில்லா_
ஐக்கிய அமெரிக்க குடியரசு தனை
அசைத்து வருகிறது - இங்கு.!

நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன்


வியாழன், 11 ஜூன், 2020

அம்பேத்கர் எனும் அஞ்ஞானி

சுதந்திர இந்தியாவின்
முதற்ச்சட்ட அமைச்சனே;
அரசியல் சாசனத்தின்
தார்மீக தகப்பனே..
                 ⚖️
என் தேசத்தின்
சமூகமருத்துவனே;
பொருளியல் அஞ்ஞானியே;
பகுத்தறிவுச் சிந்தனை சிற்பியே.!
                  ⚖️
அதிசிறந்த எழுத்தாளன் நீ..
தலை சிறந்த பேச்சாளனும் நீ..
பூகோள வரலாற்று ஆசானாவரே;
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஒற்றை ஒளிவிளக்கே.!
                   ⚖️
தேசபிதா காந்தி கண்ட
'சுதந்திரம்' எனும் பொய்க்கால்
குதிரையின் மெய்க்காலே
நீயல்லவா சாணக்கியா.?
                   ⚖️
வெள்ளையனிற்கு
சாட்டையடி கொடுத்து
நேதாஜி மீட்ட தேசத்தை
கறுப்பங்கி நீயல்லவா
கண்ணியமாய் காத்திட்டாய்.!
                  ⚖️
"இந்திய பூர்வக்குடி தமிழர்கள்;
இத்தேசம் முழுமைக்கும் இவர்களே
வாழ்ந்தனர்" - என்று அண்ணல் நீரே
ஒற்றை வார்த்தையில் எங்கள்
கவுரவத்தை நிரூபணங்காட்டிநீர்..
நீர்_வாழ்க வாழ்கவே..
                  ⚖️
உன் வாழ்நாள் பூராய் - நீ 
அர்ப்பணித்தது இந்திய
தேசத்திற்கு அல்லவா
இராசதந்திரியே??
             ⚖️⚖️⚖️

புதன், 10 ஜூன், 2020

தேசத்தின் பொருளாதாரம்.!

நம் இந்தியாவின் 
பொருளாதாரத்திற்கு
எத்தனையாயிரம்
சேதங்களடா சாமி.??
                 🇳🇪
ஆயிரமாயிரம் நிமிர்முட்டுக்கள்
கொடுத்தாலும் தேசம் 
நிமிர்வதாய் இல்லை.!!!
                  🇳🇪
பாரதம் என்னும் புதையல்தனை
காக்க ஒப்பேற்ற பூதங்களே - அதை
திண்று தீர்க்கிற கொடுமை.!!
                   🇳🇪
இங்கு சாமானியன் என்னும்
மனிதக் குஞ்சுகள் அனாதையாய்
கொடூர அவலம்.!!
              🇳🇪🇳🇪🇳🇪
வரிகள் ஸ்ரீ ஆரோன்.

வரிகள் ஸ்ரீ ஆரோன்

நாம்..
நிதானம் இழக்கும்
போதெல்லாம் - வாழ்க்கை
நம் ஆளுகயை விட்டு அதிகதூரம்
சென்று விடுகிறது - இது
தலைவலியின் பொழுதுகளில்
இதயம் சொன்ன வரிகள்.!

நிசத்தில் நடந்த கதை 🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭

ஒருமுறை நான் இந்தியாவிற்கு சென்றிருந்தேன் அப்பொழுது #கேரளா-வில் மூன்று மாதங்கள் தங்கவேண்டியிருந்தது.

அதற்காக ஒரு தமிழ்நாட்டு இஸ்லாமிய தமிழ் நண்பரின் வீடு, மாதவாடகை பத்தாயிரத்திற்கு கிடைத்தது. உள்நுழைந்த
அன்றைய பொழுது பேசிக்கொண்டிருந்தபோது _ இந்தியாவின் அரசியல் பற்றியும் அதில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவது (இராமர் கோயில் , காஷ்மீர் ) பற்றியும் தங்களுக்கு சரியான நீதி, அங்கீகாரம் கிடைப்பதில்லை!!! _ என்று கவலையாய் சொன்னார்; நானும் ஆமோதித்தேன்!

அப்படியே இரண்டு மாதங்கள் கடந்தது, மூன்றாவது மாத வாடகையுடன் மின்சாரக் கட்டணத்தையும் செலுத்துமாறு கூறினார்; மாறாக நானோ, "எல்லாவற்றுக்கும் சேர்த்து வாடகை பேசியிருந்தோம், இப்போது மேலதிகமாக கேட்கிறீர்கள் நியாயமா?? என்று கேட்டேன்" ஒருவாறாக விட்டுவிட்டார்.

பின்னொரு நாளில் இன்னும் சில நிபந்தனைகளை விதித்தார்; மீண்டுமாய் கொடுக்கப்பட்ட வீட்டில் மற்ற அறையில் இன்னுமொரு பையன் தங்க வருவதாக கூறினார்..

நானோ "எனது மனைவியுடன் இங்கு வசிக்கிறேன், ஆகையால் அது அவ்வளவு நன்றாக இருக்காது; மேலும் நான் வீட்டை வாடகைக்கு எடுத்தேனே தவிர அறையை அல்ல, ஆக நாங்கள் வீட்டை விட்டபின்னர் வேறு யாரையும் வைப்பதே உகந்தது" என்று உறுதியாக கூறவே - ஏதோ சமாதனமானார் ஆனால் மனமும், முகமும் சரியில்லை!!

மூன்று மாதம் கழிந்தது, நான் வீட்டைவிட்டு வெளியேறும் அன்று அவரைக் கூப்பிட்டு சாவியைக் கொடுத்து, "ஒரு சில வார்த்தை பேசலாமா.?" என்றேன்.. "சொல்லுங்கள்.!" என்றார்!!

"இந்திய தேசத்தில் இஸ்லாமியர்கள் பாரசீகத்தில் இருந்து வந்து குடியேறி பலநூறு வருடங்கள் ; சுதந்திரத்திற்கு பாடுபட்டோம் ; நாங்களும் இந்த நாட்டு பிரசைகள் என்றாலும் எங்களுக்கு சுதந்திரம் இல்லை ; மன உளைச்சலோடு வாழ்கிறோம் " என்று முன்னொரு பொழுது சொன்னீர்கள் அல்லவா.? என்றேன் "ஆம்" என்றார்.

உங்களது வீட்டில் மூன்று மாதங்கள் தங்கி வாடகை தந்தேன்; இருந்தும் எனக்கு வேறொரு இடம் தேடமுடியாது என்கிற சந்தர்ப்பத்தை புரிந்து கொண்டு; இந்த சிறியதோர் வீட்டிற்காக எத்தனை நெருக்குதல்கள் கொடுத்து வஞ்சித்தீர்கள்.! 

அப்படியிருக்க..
இவ்வளவு பெரிய தேசத்தில் பொதுவான அனைத்தும் தங்களுக்கு கிடைக்கிறது என்பது உறுதி ; இருந்தபோதிலும் ஒரு சில நேரங்களில்; சில இடங்களில்; சிலபல முரண்பாடுகளோடுகள் ஏற்படும்போது அந்த தேசத்தையே குற்றம் சொல்லி வெறுக்கின்றீர்கள் இது எப்படி நியாயமாகும்.? ; மேலும் மக்களுக்கு முழுசுதந்திரம், அபிலாசைகள் நிறைவாக்கும் நாடு எங்குள்ளது என்றேன்.??

மீண்டுமாய் "உங்களது #மனங்களில் மாற்றம் ஏற்படாத வரையில் நீங்களும் இந்த சமுதாயத்தில் அல்லது தேசத்தில் மாற்றத்தினை எதிர்பார்க்க முடியாது _ தங்களது உதவிகளுக்கு மிக்க நன்றி" என்று விடைபெற்றேன்.

அவர் தவறை புரிந்து கொண்டு; பதில்பேசாது நின்றார்; இப்போதும் அவ்வப்போது பேசுவேன்; எது எப்படி இருப்பினும் அவர் என் நண்பர்.

_நமது எண்ணங்கள் மாறினால் நம்மை சுற்றி அனைத்தும் மாறும்_

நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன் 

செவ்வாய், 9 ஜூன், 2020

👁️கண்பேசும் வார்த்தைகள்💋

என்னவளது..
மெல்லிய மெளனத்தின்
பொழுதுகளில் - அவள்
கண்கள் பேசும்
ஜால வார்த்தைகளிற்கு
இவ்வுலகில் 
எம்மொழிக் கவிதையும்
ஈடல்லவே !

கூட..
அவ்விழி ஜாலங்களின்
பொருள் விளக்க
குமரியின் புலவனாலும்
ஒண்ணாது - அவளால்
சீவிக்கும் எனைத்தவிர.!

இப்படிக்கு,
உண்மையுள்ள காதலன்.
ஸ்ரீ ஆரோன் 

புதன், 3 ஜூன், 2020

இதுவல்லவோ தாய்மை.!

உசிரு போகும் போதும்
தண்ணீருக்குள் நீ மூழ்கினால்
உன்குட்டி செத்துவிடும் என்றோ
நின்ற பாட்டிலயே மரித்துப் போனாய்??
தாயே.. இதுவல்லவோ தாய்மை!!!

மனுசரை காப்பாற்ற ஆயிரம்
திட்டங்கள் வகுத்த அரசே..
கடவுளின் தேசமாம் கேரளா 
அதில் மனிதாபிமானமிலா
கரிப்பிள்ளை தாய்ச்சியின்
கருணயற்ற கொலை - அதுவும்
பசியாறக் கொடுத்த ஒற்றைப் பழத்தில்!!
என்ன நீதி செய்வீர் காண்..?!

நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#மனிதா மனிதம் எங்கே 
#கர்ப்பிணி யானை உயிரிழப்பு

ஒரு குட்டியின் கடைசிப் பிளிறல்!!

அம்மா.. அம்மா...
பேசும்மா..மூச்சு முட்டுதும்மா..!!
பலநாள் பசிக்கு எனக்கு
தண்ணீர் மட்டும் போதாதம்மா..

இத்தன நாள் ஊங்கூட 
பட்டினியா நாநலஞ்ச;
இப்போ அப்போன்னு ஊரெல்லாம்
கொண்டலஞ்ச முடியல..
அம்மா.. அம்மா...
பேசும்மா மூச்சு முட்டுதும்மா..!!

ஏ..அப்பன் சொல்லும் கேக்கல - நீ
ஏம்பசி தீக்கனூண்ணு - மனுசவாட
எட்டியும் எதுக்காக இங்கவந்த..?
அம்மா.. அம்மா...
பேசும்மா மூச்சு முட்டுதும்மா..!!

நேத்திது நம்ம வனதேசமுன்னு;
ஆத்தாதது புலம்பி ஏப்பிளைப்பா 
பெருமூச்சு விட்டு வந்த
எனக்கு பசியாப் பசிக்குதே..
அம்மா.. அம்மா...
பேசும்மா மூச்சு முட்டுதும்மா..!!

ஏதோ மனுசப்பய உண்டிதரவரா..
பயமா இருக்குதுன்னும்; ஏம்பசியாத்த
ஏடுத்துகிறேன்னும் ஆறுதலா முனகின
இப்போ ஊஞ்சூடு குறையுது கூட
ஏஞ்சீவன் போகக் கேக்குதிங்க
அம்மா.. அம்மா... 
பேசும்மா மூச்சு முட்டுதும்மா..!!

இக்... இக்.. இக்..
ம்மா.. ம்மா... மா...ஃ

இரங்கலுடன்.. 
நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#கர்ப்பிணி யானை உயிரிழப்பு 

கிராமத்து கிளியோபாட்ரா

சிவன்வேம்பு புட்பம் - இது
கண்ணிற்கினிய மஞ்சழகு - இவளை
காணும் கண்களின் காலயை
களிப்பாக்கிடுவாள் - தன்
சுந்தர எடை அசைப்பில் 
சிறுகாற்று அதுதான் காண.!
                   ✨💮✨
தேனீகட்கு தேனிற்கினிய
துளிமூலம் கொடுக்கும் கொடயீ;
இவள் காலைப் பனித்துளியை 
கோலிச் சுமந்து நாள்முற்றும்
தான் வாடிடாது மிளிரும் 
அதி புத்திசாலியும் ஆனவள்;
கிராமத்துப் பூக்களில்..
இவள்தான் கிளியோபாட்ரா.
                    ✨💮✨

ஞாயிறு, 31 மே, 2020

எரிந்தது நூலகம் அல்ல; தமிழர் அடையாளம்!

🔥தமிழர்களின் அடையாளமாக ஆசியாவின் அசைக்க முடியாத நூல்களின் கல்வியின் திமிராக நிமிர்ந்து நின்ற புத்தகங்களின் ஆலயம் எரியூட்டப்பட்டது இன்றைய நாள் 1981 வைகாசி 31, அன்றைய நாள் நினைவுக்கு அடிக்கோடிடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. தமிழர் பொக்கிசமான வரலாற்று ஆதார நூல்கள் மறுநாள் வரை எரிந்து புகைந்து கொண்டிருந்தது.

🩸சுதந்திரக்குக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்த ‘அரசியல் பிணக்குகள்’ அரைநூற்றாண்டின் பின்னர் இனப்பிரச்சினைகள்- ஆயுத மோதல்களாக வெடிக்க காரணமான முக்கியமானது யாழ்பொது நூலகம் மீதான #இலங்கை அரசின் வன்முறை அதற்குள்ளிருந்த கிட்டத்தட்ட #ஒரு இலட்சம் புத்தகங்கள் ; வரலாற்று #சிறப்புமிக்க ஓலைச்சுவடிகள்  என்பன #கொடுந்தீயில் எரிந்து சாம்பலாகியது.

💥எரிந்து இன்று 39 வருடங்கள் கடந்து விட்டது அதற்குள் #இனவிடுதலை போராட்டம்  வீறுகொண்டு எழுந்து கோலொச்சி; ஒட்டுமொத்த வல்லரசுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசினால் #கருவறுத்தும்  முடிக்கப்பட்டுவிட்டது. 

💔ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் படுகொலை; ஒரு மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்களின் புலம்பெயர் வாழ்க்கை; இலட்சக்கணக்கான தமிழர் வாழ்விழந்து அலைக்கழிவு என்று செல்கிறது அவலங்களின் பின்னணி.

💀யாழ். பொது நூலக எரிப்பு என்பது ஒரு இனத்தின் மீதான வன்முறையின் அழிக்க முடியாத அடையாளம். தமிழர்களின் புலமைச் சொத்தின் மீதான அதிகாரவர்க்கத்தின் அசிங்கமான ஆத்திரம் இப்படி நீண்டு செல்கிறது.

✒️ வரிகள் ஸ்ரீ ஆரோன்:
"லங்கா அரசு கட்டளை
தமிழின அழிப்பு காடயருக்கு..
யாழ் பொதுநூலகத்தை
தீயிடச்சொல்லி.!
ஆனந்த கூத்தாடிய
காடைகோணகியார் - தாம்
மனகுரோத வெறியில் தீயிட்டர்..
இலட்ச லட்சமாய் கருகிய
வரலாற்று நூல்கள்; ஆதிஏடுகள் - அவை
இருமலும் அழுகைக்குரலும்..
உலகத்தமிழர் இதயங்களதை நொறுக்கியது ; கல்வியறிவிலா
சிங்களதேசமோ கைகொட்டி சிரிக்கிறது.!"

நன்றி_
தொகுப்பு ஸ்ரீ ஆரோன் 

வெள்ளி, 29 மே, 2020

ஐயன் கலாமும் ; ஆரோன் நானும் 🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

3️⃣_கலாம் சொன்னது:_

“#அக்னி ” ஏவுகணை 1989 ஏப்ரல் 20 ல் சோதனை பார்க்க நாள் குறிக்கப்படுகிறது,
நாடே எதிர்பார்க்கும் 20 ம் தேதி கிளம்ப சில நிமிடங்கள் இருக்க  தொழில்நுட்ப பிரச்சனையால் #ரத்து செய்யப்படுகிறது இதை ஊடகங்கள் கிண்டல் செய்தன.
மேலும் ஆராய்ச்சி கூடத்தில் #தோல்வியால்  துவள்கிறார்கள்; ஆனால் நான் “எஸ் எல் வி முயற்சியில் நாங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் கடலில் விழுந்தது ஆனால் “#அக்னி ” கண்முன்னே இருக்கிறது #முயற்சியுங்கள் “ உங்களால் முடியும் என்றேன்.

✒️விஞ்ஞானி மாத்திரமன்றோ; தெளிந்தகுருவும் ஊக்கந்தரும் ஞானியுமாய் வாழ்ந்த கலியுகத்தில்
ஒரேயொரு சாந்தசித்தாந்தி கலாம்.

2️⃣_கலாம் சொன்னது:_
மீண்டும் தூக்கம் இல்லாமல் உழைக்கிறார்கள், 1989 மே 1 அதாவது பத்து நாட்களில் குறிக்கப்படுகிறது ஆனால் கிளம்ப 10 நொடி இருக்கும் மீண்டும் ரத்து செய்யப்படுகிறது.

1️⃣_கலாம் சொன்னது:_
பின்னரும் கடுமையான முயற்சிக்கு பின் தவறுகள் களையப்பட்டு 1989 மே 22 ல் அக்னி கிளம்ப 20 நாட்களில் திட்டமிடப்படுகிறது அன்று தட்ப வெட்பநிலை சரியில்லை, புயல் அபாயம் என்று வானிலை பயமுறுத்தியது ஆனாலும் வெற்றிகரமாக “அக்னி” பாய்ந்து விடுகிறது. எங்களுடைய ஐந்து வார மன உளைச்சலை 600 நொடியில் சடாரென்று துடைத்து விட்டது.

✒️"விடாமுயற்சி மாத்திரமே
இவ் வாழ்க்கையில் வெற்றி
கொணரும் பரமரகசியம் - என்று
அறிந்திருந்தார் கலாம்."

🌱_கலாம் சொன்னது:_
பாதுகாப்பு அமைச்சர் கே சி பந்த் “கலாம்! நாளை அக்னி வெற்றியை கொண்டாட நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என;  கேட்க அதற்கு நான் யோசித்துவிட்டு RCI ல் [Research Centre Imarat] ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றேன்.

✒️"செயற்கை அறிவாராய்ச்சியில்
கைதேர்ந்த கலாம்; இயற்கையிலாது செயற்கை பயன்தராது - என்று
ஆழமான நிசத்தை..
மனதில் வேரூன்றியிருந்தார்.!"

🚀_கலாம் சொன்னது:_
ஜெர்மனியின் உதவியால் தயாரித்து இருப்பதாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இது சுதேசி ஏவுகணை என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை ஆனாலும் அதை பொருட்படுத்தாது நாங்கள் அடுத்த ஆராய்ச்சியில் இறங்கினோம்.

✒️"அவாமானங்கள்
ஒவ்வொன்றும் தான் கற்கும்
ஒவ்வொரு புத்தகத்திற்கு சமமாக எண்ணியிருந்தார் கலாம்
அதனாலயே அவருக்கு சக்கிப்பு சத்தியகுணமாக இருந்தது.!"

📡 _கலாம் சொன்னது:_
நான் #சோதனையில்  ஈடுபட்டுகையில் வெடி விபத்து ஏற்பட்டு அதில் #தீக்காயம்  ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்க படுக்கை வசதி கூட இல்லாமல் இருந்திருக்கிறேன்; இது மட்டுமல்ல நான் #விஞ்ஞானியாக ஆராய்ச்சி காலத்தில்  #பொதுப் பேரூந்தில் தான் பயணித்தேன்.

✒️"கலாமின் #எழிமைதான்
தமிழ்நாட்டில் உதித்த தமிழரில்
#கக்கன் , #காமராசர் க்கு
அடுத்தவோர் தலைவராக
ஒப்பிடத் தூண்டுகிறது.!"

நன்றி.
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#www.mytamilpoet.blogspot.com 

கலாம் என்னும் புனிதன்

இவன் தாய் #ஆஷியம்மா தன்னை காதலித்ததால் "ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை சான்றோர்" எனக் கேட்க செய்தான்.

இவன் தகப்பன் ஜைனுலாப்தீனை காதலித்ததால் "இவன்தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" உரைக்கச் செய்தான் #ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்.

இவன் தாய்மொழியை காதலித்ததால் #திரைகடல் தாண்டியும் தமிழில்லா
அவைகளிலும் பாடினான் #தமிழன் பெருமை #தமிழில்.

இவன் கல்வியை காதலித்ததால்
குழந்தைகள்; இளையோர் பேதமின்றி "#கனவு_காணுங்கள் " என்று அகிலவுலகின் ஆசானான் பலகோடி #ஏகலைவர் கட்கு.

இவன் தன் பிறந்த தேசத்தை காதலித்ததால் #தமிழ்நாட்டில் , #இராமேஸ்வரம் #ஆழியலை அதன் #கரகோசத்தில் #துயில்கிறான் .

இவன் உலகத்தை காதலித்ததால் ஒற்றை #பெண்டிமணந்து #ஓரிருகுழந்தை கட்கு #அப்பனாகாமல் ; #இப்பிரபஞ்ச #மனிதரெல்லாம் தன் பிள்ளைகளாக #தத்தெடுத்துக் கொண்டான்.

வியாழன், 28 மே, 2020

தமிழீழம்

பொன்னிழை வண்ணக்கூண்டில்
புழுதிபடிந்த புன்னகையொடு..
துருபிடித்து தொலைந்து போன
திறவுகோலின் ஏக்கத்தில்..!

திருப்பங்கள் பலகண்டு;
உலகைத் திசைமாற்றி_
இனத்தடம் அழித்து;
தரணி விட்டோழிந்தான்..
தலைவனென்று - மார்புதட்டி
எட்டிய திசையெலாம்
கொட்டமிட்டுக் கொண்டாடி - #ஈழம்  
#தாய் தின்றமண்  என்றே
சபித்தாலும்...

வீரச்செழுந் தமிழர்களின்
புதிக்கரு குவியலில்
#மூப்பு; பிணி; சாக்காடு _
_தாண்டியொரு தோரணையோடு
இன்றும் #தமிழீழம்  ..!

நன்றி🔥
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 

எது தமிழர்களின் மதம்?❓❓❓❓❓❓❓❓❓❓❓

[எது தமிழர்களின் மதம்?
❓❓❓❓❓❓❓❓❓

♨️தமிழர் நாகரிகம் என்பது♨️ 
மிகப்பழமை, மேம்பட்ட பண்பாடு, கலாசாரத்துடன் கி. மு 6000 வரையான தொன்மை கொண்ட வரலாறு என்று தொல்பொருளியல் சான்றுகள் மற்றும் அகழ்வாய்வுகள் சொல்லுகிறது.

தமிழர்களின் உண்மையான மதம் பற்றி பெரும்பாலானோர் தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை; அதனால்தான் நமது மொழியே நமது பெரும் அடையாளம் ஆகிறது.

♨️ தமிழர்கள் ஊனுண்ணிகள்♨️
நம் முன்னோர் வேட்டையாடியும், மிருகம் மற்றும் பறவைகள் வளர்த்து, இறைச்சி உண்டு வாழ்ந்தனர் ஆகயால் #கொல்லாமை , #புலால் மறுத்தல் நம் முன்னோர் கொண்டிருக்க வாய்ப்பில்லை. தங்கள் தேவைக்கும், சூழ்நிலைக்குமாய் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலில் #பலி கொடுத்தும் , இறைச்சிகளை உண்டும் வந்துள்ளனர் என்பதும் #இலக்கிய நூல் களில் இருந்து அறிய முடிகிறது மேலும் இவை பாவத்திற்ககுரிய செயல்களாக நம்முன்னோர் கருதவில்லை.

♨️ தமிழர் வாழ்வியல்♨️
தமிழ் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் பழமை வாய்ந்த நூலான #தொல்காப்பியம்   நடுக்கல் வழிபாடு பற்றியும் குறிப்பிடுகிறது; இந்நூல் தோறாயமாக 5000 ஆண்டு பழமைமிக்கது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

♨️ தமிழர் மரபு வழிபாட்டு முறை♨️
#நடுக்கல் வழிபாடு என்பது தமது முன்னோர்களில் வழிகாட்டிகளாக
விளங்கி வீரமரணமானவர்கள் நினைவாக கல்லை நட்டு அதுவே இன்றைய #குலதெய்வம்_வழிபாடு ஆகும். உதாரணமாக முருகப்பெருமான்
கருப்பன், முனியர், விருமாண்டி
மதுரை வீரன், எல்லைச்சாமி இன்னும்...

♨️தமிழர்கள் மத சார்பற்றவர்கள்♨️
ஆதித்தமிழர்கள்  மதசார்பற்று இயற்க்கையோடு இசைந்து வாழ்ந்துவத்துள்ளனர் என்பதாய் #தொல்காப்பியம்  சொல்லும் கருத்துகள் உணர்த்துகிறது; ஆக மதம் என்ற ஒன்று தமிழர்களுக்கு இல்லை  என்பதே உண்மை.

♨️தமிழர் மாதத்தில் நுழைதல்♨️
நமது முன்னோர் நடுகல் வழிபாட்டுக்கு  ஒத்ததான பண்புடைய #ஆரியதெய்வ நம்பிக்கைகள்  ஆரியரோடு தமிழர் கலக்கும் பின்னான காலகட்டத்தில் அறிந்து அதனை தங்களது தெய்வங்களாக மறுப்பின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர்; புலால் மறுத்தலையும் ஏற்றுள்ளனர்; அதன் கூடவே சாதிகளும் நமக்குள் புகுந்துள்ளது. பின்னர் கி.பி 52 இலிருந்து கிறிஸ்தவமும்; கி.பி 700 களில் இசுலாமும் புகுந்து கொண்டது.

♨️ தமிழரின் மெய்யியல்♨️
#தொல்காப்பியம்  பல்வேறு மெய்யியல் சார்ந்த கருத்துக்கள், இயற்கையின் தன்மையை அறிந்து வாழ்ந்த தமிழர்களின் பல கண்டுபிடிப்புகள் மருத்துவக்கலை, தற்காப்பு கலை, அறிவியல், இசை, இலக்கணம் மேலும்பல சொல்லுகிறது.

♨️ தமிழா விழித்துக்கொள் ♨️
 ஆக இன்று #மதம், சாதி, அரசியல், சினிமா, போதை வஸ்துக்களில் சிக்கி உணர்வற்று கிடக்கிறோம்; நமக்கான கடமை நாளைய நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளான #அடுத்த சந்ததிக்கு நல்ல எதிர்காலம் , கொடுப்பது அதற்கு ஒற்றுமை, ஒழுக்கம்,பண்பாடு, சமூகநீதி, மாசில்லா இயற்கை, தேசத்தில் சிறந்த தலைவர்கள் மட்டுமே அவசியம்!!

♨️ உறவுகளே மன்றாடுகிறோம்♨️
#எந்த மதம்??  #எந்த ஜாதி?? 
#வேற்றுமை விடு ; #தமிழனாய் எழு !! 
#உன் தேசம் ; #உன் நாளைய சந்ததி  செழிக்க நல்ல தலைவனை தெரிவு செய்; #மாற்றம் ஒன்றே மாறாதது  ; #நமக்கு தமிழர் என்னும் குலம்; ஒரே கடவுள்தான் உலகில் அதற்கு பல நாமம் இருக்கலாம் வெறுக்காதே உன் உறவுகளை.

நன்றி_
தொகுப்பு ஸ்ரீ ஆரோன்


சிந்தனயை தனித்துமாய் மாற்று! 👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

நம்முடைய கருத்துகள் - பலரால்
நிராகரிக்கப்படும்..
என்றாலும் சிலரால் ஏற்கவும்;
உற்சாகிக்கவும் படலாம் - ஆக
நாம் நம் வாழ்க்கையில்
#வெற்றிசிறக்க  நிலைத்து - நின்று
#போராடி ஆகணும் .!

இந்தவுலகில் - நாம்
#பாடுகளுள்ள மனிதன்  
நமக்கு கோபம், வக்கிரம்
விடாப்பிடி இவையாவும் - இங்கு
பொதுவான மனப்பாங்கு.!

ஆனாலும்..
#அன்பு’ ; #விட்டுக் கொடுத்தல்      
#பிறரை ஏற்றுக்கொள்ளுதல் - ஆன
பண்புகள் #இதயக்கொடை - அது
சீக்கிரத்தில் மனிதருள் வருவதில்லை
காரணம் இது #பாவத்தில் நிறைந்த பூமி .!

மனிதனல்லா இன்னொரு உயிரின்
பார்வையில் நாமெல்லாரும்
மனிதர்கள் அவ்வளவுதான்.!
நம்மிலெந்த வேற்றுமையும் காணாது.

ஒரு மேய்ப்பன் ஆட்டுமந்தையில்
கருப்பு, வெள்ளை சேவலை
மறையன், புள்ளியென்று - பல
வேற்றுமயை கண்டாலும்
அத்தனையும் அவனுக்கு ஆடுகள்தான்.!

வாழ்க்கையின் இந்த நிசம் புரிந்து
வாழ்வது மிக்கக் கடினம் - காரணம்
#மனிதமனம் சுயநலம் கொண்டது;
#மனிதயினம் பாதகமமெண்ண வலியது;
அதை தாண்டி - #அன்பு கூருவோம்  
#மனிதனாய் ஜெயித்திடுவோம் .!

"அனைவருக்கும் அன்பும்; அறனும் 
உடையதாய் #நல் வாழ்க்கை "
அமைய வேண்டுகிறோம்!

நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#www.mytamilpoet.blogspot.com 

கனவு நாயகன் நிசதில்

பிறந்த மண்ணிற்கு
பெருமை கொண்டாய்;
மாணாக்கர்தமை #கனவுகாண் என்றாய்;
குழந்தைகட்கு #அறிவுசார் 
கதைகள் சொன்னாய்;
இளையோருக்கு #தேசப்பற்று 
எழுச்சி தந்தாய்;
மதம் மொழி இனம் கடந்து - உன்
மக்களை நேசித்தாய்!

தலைமுறை தாண்டி
மனிதர்(ம்) வாழ யோசித்தாய்
#அக்னிச் சிறகுகள்  தனால்
வேற்றுமைகளை சுட்டெரித்து
#தேசமிதின் கவுரவத்_தாய் நீ  

"#பசுமை கலாம் திட்டம் " அதில்
நம் பாலைதேசத்தை சோலையாக்க
#சின்னக்கலைவாணர் _கொண்டு
சிந்தைக் கருவில் சீரியவிதை விதைத்த
#வனம் ஏகாத வனவாசி - நீ

நீ வறுமையின் குழந்தையாய் பிறந்து;
திறமையின் மிகுதியால் வளர்க்கப்பட்டு;
விடாமுயற்சியால் உயரங்கள் தொட்டு;
கவுரவப் பலகணியில் உசந்து உட்கார்ந்து;
இல்லறம் துறந்து நல்லறம் கற்பித்தாய்;
பின்னும்- தலைக்கனம் ஏறாத தலைவனாய்
கக்கன், #காமராசர்  வரிசையில்
தமிழ்நாடு கண்ட தமிழன் நீ..!
உன்புகழ் வையகம் சொல்ல - தமிழினமே
பெருமை கொள்கிறது தமிழா!!

நம் முப்பாட்டனவன்
கனியன் பூங்குன்றன்
நாமத்தை  ஐரோப்பிய தேசத்தின்
அரசியலரங்கு வரை "#யாதும் ஊரே; யாவரும் கேளீர்!  " என்ற ஞானவரியால்
பொதுமை உரைத்த தமிழன் - இவர்.

இவரை வாழ்த்த சொரிந்த 
பூக்களின்களின் குழைந்தை மலர்கள் 
ஆர்ப்பரிக்கின்றன தாங்கள் - தான்
பாக்கியவான்களில் கடைசி என்று
அன்றுதான் - பாரெங்கும் இரங்கள்
தாங்கோனா துயர் விடை கொடுத்தோம்
இராமேசுவரம் கடலில் கரிப்பது
உப்பல்ல எங்களின் கண்ணீர்!

தங்களை மூணே வரியில்
சொல்லி முடிக்கிறேன்..
"கலாம் நீ காலம் கரைக்காத
இந்திய மணிமகுடத்தில் தமிழ்
பதித்த கோவினூர் வைரம்"

நன்றி.
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#www.mytamilpoet.blogspot.com 

சனி, 23 மே, 2020

அரசியல் வார்த்தைகள்.!

அதுதான் இன்றைய அரசியல்..
நம் தேசத்தின் பங்காளர்களை எப்படி அவதூறான வார்த்தைகளில் அழைக்க முடியும்? 

ஆதலால் அகராதியை கிண்டிக்கிளறி; ஊடகங்களை ஊக்கப்படுத்தி; புதிய கல்விக்கொள்கையிலும் இணைத்து விடுவோம்.!

இராவணமகாராஜா கேட்டவனானார் இன்றைய புராணத்தில்; ஆனால் நம்முன்னோர் அவரை கடவுளாவே கண்டனர் என்பது வரலாறு.!

ஆக..நாளைய வரலாறு
இன்றைய திருடர்களை
கதாநாயகர்கள் ஆக்க.. 
இப்போதே களமிறங்கிவிட்டதே
இதன் நிதர்சனம்!!!

வள்ளுவன்குறள்தனில்..
"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்"
என்கிறது..

இதுகூறுவதாவது "ஒருகெட்டவர் பற்றி பேசும்போது வசீகரமான பண்புகளுடன் சொல்லி அவரை பிடிக்காதோரும் அவர்பற்றி நல்ல மனிதர் என விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்."

நன்றி
வரிகள் ஸ்ரீ ஆரோன்

நேர்மையின் சகாயன்/ம்.!

இச் சமகாலத்தில்..
ஓர் நேர்மையின் அறத்தமிழர்
நிசத் தமிழ்த்தேசிகன் - இவர்
இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாய்
மக்கள்பாதை கண்ட செம்மல்.!

"பாண்டியனின்
நெறிதவறிய மதுரை"
அதுதனில் இவன்வழி
நேர்மையது நின்று வழுவாது - காண
பார் நிமிர்ந்து பார்க்கும் வண்ணம்
பாரதத்தின் பெருமை சூடிய
நற்பேர் கொண்டோன்.!

"லஞ்சம் தவிர்த்து..
நெஞ்சம் நிமிர்த்து" - என்று அரியாசனத்தில் பின்புலத்தே
மட்டுமில்லை; புத்தியின் மத்தியில்
ஆழமாய் புதைத்து தேசத்தின்
மத்தியையும்; மானிலத்தையும்
அசைத்த கொள்கை வேந்தரிவர்..
மக்கள் பழிகொள்ளா நேயன்.!

நேர்மையின் துணை காண..
"தண்ணியில்லா காடு காணவும்
தயங்கேன்" என்றுரைத்து..!!
கடவுளிற்கு மட்டும் அஞ்சித்தன்..
23_வருடப் பணியில் 24 தடவைகள்
பணி மாற்றமும் கண்டு - தன்
புனிதங்காத்த கறைபடாத
கரங்களின் அபூர்வி.!

இவரோர்..
வீரிய தாய்மொழிப் பற்றாளன்;
தாயகம் சுரண்டுவரின் கடுங்கோபி;
தேச நாசிக்களின் எதிர்ப்போராளி;
மரபு விவசாயத்தின் பசுங்காவலன்;
குருதிக் கொடையில் பாரிமைந்தன்;
சட்டதின் ஓட்டைகளில் ஓடவல்ல
சுண்டெலிகள் கஜானாக்களில்
மணியடித்த கண்ணியப் புலிப்பேறு.!

நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன்

வெள்ளி, 22 மே, 2020

தொப்பிள்க் கொடியறுந்து

தொப்பிள்க் கொடியறுந்து
தேசமெங்கும் தாயிப் பெண்டீர்
குருதியால் நிறைகிறது சாபம்.!

யாரைக் குற்றம் சொல்ல?
இது யார் குற்றம்?    
ஓநாய்களும்; நரிகளும்
ஆளும் தேசமிதில்.!

அன்று - கானான் தேசம்
தேடிய பயணம் போல்..
இன்று-இந்திய தேசமதில்
ஆயிரமாயிரம் மைல்கள்
சொந்ததேசம் சேர
நடைபயணம்..!

யாரைக் குற்றம் சொல்ல?
இது யார் குற்றம்?   
ஓநாய்களும்; ஊழை நரிகளும்
ஆளும் தேசமிதில்.!

நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன் 
www.mytamilpoet.blogspot.com 

ஓநாய்களும்; ஊழை நரிகளும்.!

யார்கடிய; யாரைக்கடிய?      
யார்மேல் குற்றம்?
ஓநாய்களும்; ஊழை நரிகளும்
ஆளும் தேசமிதில்!

தொப்பிள்க் கொடியறுந்து
தேசமெங்கும் தாயிப் பெண்டீர்
குருதியால் நிறைகிறது சாபம்
யார்கடிய; யார் குற்றமிது?

ஆற்றாமையால்..
அங்கோர் பச்சிளஞ்சிறுமி 
பதை பதைத்து கருகுகிறாள்.!
குரூர பிசாசுதாம் எரியூட்டி - சட்டமிங்கு
பணம் நீட்டுதிங்கு உசிருக்கு ஈடாய்.!
யார்கடிய; யார் குற்றமிது?

காமவக்கிரச் சாத்தான்கள்
சதைப் பிண்டந்தனில் 
சலனங் கொண்டு - பாலகன்
என்ற சிந்தையற்று - சினை
சிதைத்துச் சீரழிக்கிறான்.!
யாரைக்கடிய; யார் குற்றமிது?

"குடி குடியைக் கெடுக்கும்" என்ற
வார்த்தைக் கவனம் சொல்லி - வரி
ஞானமற்ற வறுமைச் சுதேசிதமை
வஞ்சித்து வறுகும் எமராசன்கள் - கூடி
தேசத்தை ஏலத்தில் கூவித் - தம்
திருவாயில் ஏப்பமும்; எம்காதில் பூவும்.!
யார்கடிய; யாரைக்கடிய?

விபிலியம் சொல்லும்
கி.மு_வில் இஸ்ரவேலரின்
"கானான் தேசம் தேடிய பயணம்"
இன்று.. கண்முன்னே மீழுகிறது.!
இந்திய தேசமதில் ஆயிரமாயிரம்
மைல்கள் சொந்ததேசம் காண நடை..
யாரைக் கடிய ; யார் குற்றமிது?

குற்றம் கடிந்தென்ன பயனிங்கு?
"துப்பினால் துடைத்துக் கொள்வேன்"
என்று பெருமை பேசும்
மாந்தரெலாம் தர்பாரில் இயல்பாய்
அரசியல் கொண்டாட - நாம்
யாரைக்கடிய; யார்மேல் குற்றம்?
ஓநாய்களும்; ஊழை நரிகளும்
ஆளும் தேசமிதில்!

கண்ணீருடன் நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன் 

வியாழன், 21 மே, 2020

நீ யாராக இருக்கிறாய்?

"தானுண்டு தன்வீடு உண்டு" - என்று
சீவிப்பவன் ஆறறிவுற்ற விலங்கு; மாற்றானை தானாகக் கருதி கைக்கெட்டிய உதவி செய்து வாழ்பவன் மனிதன்.
                           ⭕
தாயை, தகப்பனை மதிப்பவன் உற்றபிள்ளை - மாறாக
அவமதிப்பவன் கேட்டின்பிள்ளை.
                           ⭕
தாய்மொழி பேசியதை கவுரவமாய் காண்பவன் உணர்வாளன்; தாய்மொழி தூற்றி, பிறமொழி போற்றுபவன் மதியிழந்த பிதற்றாளன்.
                           ⭕
தேசத்தை மதித்து..
அதுதன் சுரண்டலின் எதிர்விசைகாட்டி
தேச வளர்ச்சிக்கு போராடுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன் - மாறாய்
தேசத்தை அவதூறுபேசி..
குறை காண்பவன் பொல்லாங்கன்.
                          ⭕
தேசத்து ஜனங்கள்
தன் சொந்தங்கள், அவர் நலனுக்கு உழைப்பவன் ஜீவிக்கும் மகான் - எதிராய்
மக்களை குறைகூறி வஞ்சிப்பவன் சாபத்தின் பிதிர்.
                         ⭕
தன் ஜனங்களென்று..
ஒற்றுபட வழிநடத்துபவன்
கீர்த்தியின் தலைவன் - இலாது
பிரிவினை கூட்டி சுயலாபம் ஈட்டுபவன் சாத்தானியகூலி.
                        ⭕
இப்பொழுது.. 
உன் இருதயத்தைகேள்;
நீ யாராக இருக்கிறாய்?
தயவாய்..
ஒரு மனிதனாகவாவது
வாழ முடிவெடு!!
                    ⭕⭕⭕
நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன் 

புதன், 20 மே, 2020

அன்பு

அன்பு பழகுங்கள் - அது
மன்னிக்கவும் மறக்கவும்
சொல்லித்தரும்.

அன்பு காட்டுங்கள் - அது
கோபமற்ற பொறுமையின்
சுபாவம் கொணரும்.

அன்பு பேசுங்கள் - அது
கேட்டின் பாலிச்சை சாபம்
ஒழித்துவிடும்.

அன்பு நுகருங்கள் - அது
பிறர்க்கு கொடுக்க உதவும்
கரங்களாகும்.

அன்பு உணருங்கள் - அது
மனதை மகிழ்ச்சியில்
களிகூரும்.

அன்பு எண்ணுங்கள் - அது
வாழ்க்கயை அளவுகடந்து
செழிப்பிக்கும்.

அன்பு படியுங்கள் - அது
குற்றமேயிராது ஞானத்தில்
தெளிவுறும்.

அன்பு புரியுங்கள் - அது
இன, மத, சாதி மொழி வேற்றுமை
அற்ற மனிதனாக்கும்.

அன்பு அறியுங்கள் - அது
பிறரிலும் உன்னைக் காட்டும் - ஆக
உனக்குள்ளும் தெய்வம் வசிக்கும்.

அன்புதான்.. 
சிவனையும்; இயேசுவையும்; நபிகளையும் நமக்கு தெய்வமாய் கண்டது; ஆதலால் அன்பு கூருங்கள் இன்னும் அதிகமாய்.

நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#www.mytamilpoet.blogspot.com 

திருவள்ளுவர் சமயம் எது?

திருவள்ளுவர் சமயம் எது? 

✴️இதை அவரின் திருக்குறள் கொண்டு யாரும் அறிவது கடினமாக காரணம், திருக்குறள் ஒரு உலகப் பொதுமறை!

✴️"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்!" என்று தமிழகத்தில் வாழ்ந்த ஆரியர்களின் நால்வருணம் பற்றிய தீண்டாமை சாதியத்தை வள்ளுவர் அன்றே முற்றிலும் புறம் தள்ளினார் என்பது வெளிப்படை.

✴️'அந்தணன்' என்ற சொல்லை ஆரியர்கள் 'பிராமணன்' என்று அருத்தம் சொல்ல; காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவர், 'அந்தணன்' என்ற தகுதி பிறப்பால் வருவதல்ல அவனது கல்வியால், ஞானத்தால் வருவது என்றார்; 'அந்தணன் என்போன் அறவோன்! மற்றெல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்' என்று குறளை இயற்றினார்.

✴️அதனால்தான் திருவள்ளுவரை எந்த மதமாகவும் வரையறை செய்யாது 1964ஆம் ஆண்டில் உருவம் கொடுக்கப்பட்டது #கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களால் வரையப்பெற்ற படத்தையே தமிழக அரசு திருவள்ளுவரின் அதிகாரபூர்வ ஓவியமாக அங்கீகரித்து.

✴️இவர் 17.12.1908 இல் சேலம் மாவட்டத்தில் பிறந்த தமிழர் அத்தோடு இவர்தான் #தமிழ்த்தாய்  என்னும் கற்பனைக்கு உருவத்தை வரைந்தவராவார்.

✴️1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில், அப்போதைய குடியரசு துணைத்தலைவரான திரு. ஜாஹிர் ஹுசேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

நன்றி_
#அகிலவுலக தமிழர் மையம் 
#தொகுப்பு ஸ்ரீ ஆரோன் 

தமிழினப் போராளியின் காதல்/லி..!


காத்திருந்தே..

என் காலங்கள் கண்ணீரோடு
கரைந்து போயின..

நேற்றிருந்த..
என் நினைவுகள் 
நெஞ்சோடு மட்கிக் கலந்தாயின !

பூத்திருந்த..
நானிங்கு பூவாகவே
வாடி நிற்கிறேன் !

போய்த்திரும்ப
நீ மட்டும் ஏனோ - போகும்போதே
மறந்து போனாயோ????

#www.mytamilpoet.blogspot.com
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 

ஒரு ஊருல.. ஒரு ராஜா..

நோபல்கண்ட கவுரவம்


இருட்டு
தேசத்திலிருந்து
உலகத்தாரால் சபிக்கப்பட்ட
ஓர் இனத்தின் விடிவுக்காய்..

சுகபோக வாழ்க்கயை தியாகம் செய்த
"கறுப்பினத்தின் பிதாமகன்";
"சமவுரிமைச் செம்மல்";
"பட்டைதீட்டிய ஒரே மனிதவைரம்";
நோபல்கண்ட கவுரவம் - அது
நெல்சன் மண்டேலா.!!

நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் #www.mytamilpoet.blogspot.com 

கிராமத்து விவசாயி; பங்குனி 2020_சிங்காரச் சென்னையில்.!

விடிகிறபொழுது..

சிறகடிக்கும் சத்தம்

காதுகளில் கரகோசிக்க..


என் கண்முன்னே

தேவதை அசைகிறாள் - வர்ணமாய்

அதில் சாமரம் வீசும் இளந்தென்றல்

உரசிப்போகிறது என்னை..


தேவதை அவளழகு..

காவியில்; தாய்மையின் அன்பு

வெண்மையில்; பக்தியின் அமைதி

பச்சையில்; பசுமையின் செழிப்பு

நடுவே சுழலும் சக்கரம்; நீதியில் ஏற்றத் தாழ்வற்ற சமநிலை

என்பேன்.!


அவளை கைகூப்பியபடி எழுந்தேன்

ஆனந்தக் கண்ணீர்

கன்னத்தை தழுவ;

கால்களில் செருப்பு

காதுகளை இழந்திருந்தது !

வயிற்றில் எரிச்சல் - அது

அடக்கமுடிலவில்லை..!


ஒருவிசை..

கண்களை மூடி..லேசாக விழித்தேன்.!

தலையணையாய் - ஒரு

கிழிசலான சுருக்குப்பை.!

வீதியோரதில் நான்.!

துணியால் வாயைமூடிக்கொண்டு சிலர் !!

அனாதையாய் என்தேசம் !!


நிசம் புரியாது

உதடு புலம்புகிறது

"எங்கிருக்கின்றேன் ????"

ஞானத்தில் தெளிவில்லை

அப்போது புத்தி பேசுகிறது...


"இந்த தேசத்தின் விவசாயி நீ..

வங்கிக்கடனில் மீளாது;

நிலங்களை இழந்து;

நீதிதேடிச் சென்னையில்

நீதிமன்றின் சாலையோரம்

சிலவாரங்களில் யாசகனாய்

முத்திரைபதிந்து நிற்கிறாய் - கூட


திடீர் மயானமான - நகர்.!

மயக்கத்தில் எழுந்து - நீ.!

மரணத்தில் விளிம்பில் - நான்.!

உன்பசிக்கு வயது- மூன்று நாள்

இன்றோடு" - என்றது


இன்னொரு சத்தம்.. "ஐயா"

எதிரில் காவலர் "ஐயா சாப்பிடுங்கள்"

நான் "நன்றி சாமி, எப்போது விடியும்"

பின்_கைவிரித்த அவர் "ஏழரை" - என்றார்

"ஆம்!! ஏழரைதன் என்றேன்"

புதன், 13 மே, 2020

கரும்பீனிக்ஸ் மண்டேலா.!

இருண்ட கண்டத்தில் 

வெள்ளையனின் அடிமைச்சாசன

ஜனத்தினின்று ஒரு கருங்குழவியின்
ஓலம்..

கீழாபிரிக்காவில் குலுவூரில்
சோசாப்பழங்குடியின் தலைவர்
களிக்குடிலில் 18-07-1918_ல்
ஊரையே கத்தியெழுப்பியது !

இக்கர்ஜனையில் - நாளை
தம் அடிமைச்சங்கிலிகள் தெறிக்கும்
பொரியிது உண்டென்று
அன்றுயாரும் அறியிலார்..

இக் கூட்டத்தினின்று
முதற்குழந்தை - அன்று
கல்விக்கூடம் ஒதுங்கி - நான்
ரோபிசலா மண்டேலா என்றது - நில்லாமல்
லண்டன் பல்கலக்கழகம் வரைச்சென்று
பல பட்டங்களையும்; பார்சட்டந்தனையும்
கற்றொழுகிற்று..

இருந்தும் தன்தேசத்தில்
வெள்ளையர் "சகதிகடக்கவும்
கறுப்பினர் முதுகில் கால்வைப்பத்தை"
பொறுக்காத கர்ஜனைச்சீயம்
அறவழிப் போராட்டத்தில் நொடிந்தும்
அயராத மறுகணம் - தன்னை
மரபுசாரா ஆயுதப்போரில்
வலிந்து போரிடத் துணிந்தது
தன்னினத்திற்காய்..

போரியலின் ஆறுதற்பரிசு
1962_தொட்டு 27_வருசங்கள்
இராபன்தீவில் சிறைவாசம் - இருந்தும்
இனவிடுதலை நெருப்பைமுகண்டு
தொண்டையில் அடக்கிய பீனிக்ஸ்சாய்
சிறைமீண்ட நான்காம் வருசமது
1994_தனில் தென்னாபிரிக்க
குடியரசுத் தலைவராக முடிசூடியது !

ஐந்தே வருசத்தில்..
தன்லட்சியமான "கறுப்பினத்திற்க்கு
இத்தேசத்தில் சமவுரிமை" என்ற
பொறிப்பை சட்டமாக்கி - கருங்கல்லது
பட்டைதீட்டிய வைரமாய் ஜொலித்தது
நோபல்பரிசதுதானும் அவர்கரமேவி
கவுரவம் பெற்றேகியது.!!

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
தன்மகனைச்  சான்றோன்
எனக்கேட்ட தாயாய்" ஆபிரிக்க கண்டமே
பெருமிதந்தாங்கி ஒளிகண்டது - விசால
வான்முட்டி நின்ற தேவதாரு
05-12-2013 அன்று விதையாய்
தன்மண்ணில் வீழ்ந்தது - அன்றே
வரலாறு என்னுந்தாய் தன்கர்ப்பத்தில்
தரித்துக் கொண்டாள் - இவனை
கருமினத்தின் விடிவெள்ளியொன்று.

நன்றி_

கவிவரிகள்: ஸ்ரீ ஆரோன்
www.mytamilpoet.blogspot.com 

திங்கள், 11 மே, 2020

சாதிகள் இல்லையடி பாப்பா

#சாதிகள் இல்லையடி பாப்பா

சாதிகுரோதமலம்
சிரசிலேந்தி சுமக்கும்
கீளோரவர் - தம் பொருளினின்று
உயரே பாடிலார் வாழ்நாளீறாய்.!

இன்னார்..
தத்தமகத்தே பெரியோராய் காண்கினும்;
மனிதத்தகத்தே பிரம்மகத்தி- எனுங் குறுகுலத்தோரேயாம்.!

இகுதே,
தீண்டானாய் குறுக்குநூலவதாரிகள் செப்பெழுதியுரைக்கும் அம்மாந்தர்
நல்லொழுகு மாண்பு காண்கில்
அவரீர் தெய்வதின்பால் தொழத்தகோரும்;
பூமியாள் சிரசின் முதற்பேறுமாம் கேள்.!

இப்பிணியில் நீண்டுழலும்
மாந்தர்தம் கண்காணா
மறுவாழ்வினும் வலியதாம்
மறுசாகியந்தனை கற்றொழுகச்செப்புவீர்
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்னுங் கோடிட்டகருவில் - அதுவாகும்
அறம்போல் இன்வாழ்வுலகில்.

👣

_நன்றி உறவுகளே_
✒️வரிகள் ஸ்ரீ ஆரோன்.
www.mytamilpoet.blogspot.com 

புதன், 6 மே, 2020

மதுவிலக்கு மனு !

கனம்,
முதலமைச்சர் எடப்பாடி ஐயா..
தங்களது ஆட்சியில்
ஆயிரம் விமர்சனம்
இருக்கலாம்!

ஆனால்..
நாளைய தமிழகம்
உங்களை நினைவுகூர
மதுவை ஒழித்து
ஏழைக்குடும்பங்களை
காப்பாற்றுங்கள்!

மேதை அப்துல்கலாம்
கண்ட கனவது..
ஆரோக்கியமான இளைய சமுதாயம் ;
வல்லரசாகும் இந்தியா - எனுங்கருவில் தாங்களும் கைகோர்த்து
நம்தேசத்தின் எதிர்காலத்தை கட்டியெழுப்புங்கள் - தயவாய்..
கடந்தகால பாவத்தில் தாங்களும் கைகோர்க்காதீர்கள்!

உங்களை வரலாறு
தமிழனின் ஆட்சியில் தமிழகம்
மதுவற்று சுபீட்சமானது - என்று
நன்றியுடன் சுமக்கும்.

நன்றி-

வரிகள் ஸ்ரீ ஆரோன்

திங்கள், 4 மே, 2020

என்தவம் செய்தேனம்மா தமிழி.?



தமிழியுன் சிறப்பினை 
கேரளத்து கவிஞர் "ஆற்றூர் ரவிவர்மா"
உன் பேரனாயிருப்பதயே அகமகிழ
ஆர்ப்பரித்து கொண்டாடுகிறார்..

என் தாய்த்தமிழியுனக்கு
மாகனாய் இப்பிறப்பெடுக்க-யான்
என்தவம் செய்தேனம்மா?
 
நின்பெருமை அகிலமெங்கும் 
பறைசாற்றிப்புகழ்வேன் நீதந்த
கவிஞானக்கணை பூட்டிப்பெருமிதமாய் தமிழியுன் அங்கனென்று
நானுமிங்கு !

நீவாழ்க.. 
பலகோடி நூறாயிரமாண்டுகள்;
இப்பிறப்பல்ல இனியென் எப்பிறப்பிலும்
தாய்த்தமிழி நீயென்ன்தாய் 
என்றிடவே பெருமைகாண்பேனே..

இப்பூமியிது அழிந்தாலும்
உன்னக்கேது மரணம்
உனக்கேது..?

காரணமிது என்மனசு
கேட்கிறதும் நியாயம்தானே..
தமிழ் பேசும் ஓரினம்
இவ்வண்டவெளியில் எந்தோர்கோடியில்
வேறோர்பூமியில் வாழவில்லை
என்றுறோர் கருதுகோள் உண்டோ.??
இல்லயே ! 

ஆக இப்பிரபஞ்சத்தில்
நிறைவான மொழி- நீயென்தாய்
தமிழியுனக்கு தலைவணங்குகிறேன்.!

என் தாய்த்தமிழியுனக்கு
மாகனாய் இப்பிறப்பெடுக்க-யான்
என்தவம் செய்தேனம்மா?

நன்றி -
வரிகள்: ஸ்ரீ ஆரோன்
www.mytamilpoet.blogspot.com 

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

தூரி என்

சந்தோசம்

இரசிகன்:-)

உன்னால்

சுத்த முட்டாள்த்தனம்.

அழகிய சிறை

காலை அலாரம்

ஏற்ற கதவுகள்

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...