உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!
மூவேந்தர் காலத்தில்
ஈழத்திற்கு படை தந்தாய்;
இறுதிப்போர் காலத்திலும்
உணர்வோடு படை கூட்டினாய்
அதுபோதும் இனிப்போதும்
எழுந்திரு எழுந்திரு ஏற்றோர் தமிழே
உனக்காய் நீ போராட எழுந்திரு !
எத்தனை எத்தனையாயிரம்
பஞ்சாயத்துகள் உனக்கு ?
எண்ண.. எண்ண .. எழுத .. எழுத
முற்றிலா இராடினமாய் சுற்றுது
ஊருக்கூர் பங்கங்கள் சீவியத்திற்கு எதிராய் !
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!
இன்னும் எத்தனை காலம்
மத்தியில் ஓரவஞ்சகம்;
மாநிலத்தில் வெறுமையோடு
இதுதான் விதியென்று - கண்டும் காணாது
உன்தேசம் அடகுவைத்து மத்திய கிழக்கிலும்
சிங்கப்பூர், மலேசியாவிலும்
கொத்தடிமையாய் இரந்து திரிவாய் .!
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!
ஆட்சிக்கட்டிலில் அமர்வோனெலாம்
''திராவிடன் நாமென்று'' உறவுசொல்லி
ஐந்து சந்ததிக்குமான ஆஸ்தி, அந்தஸ்தை
உன்வயிற்றில் திருடுகிறான்;
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!
சமஸ்கி-இந்தி உனக்கு - ஆனால்
வடக்கோ(ன்) ஜீவனோபாயம்-இன்று
அரைகுறை தமிழில் தமிழகத்தில்
இதுதான் நகைச்சுவை.!
கொடைத் தமிழினமே "இன்னுமா நீ..
வந்தவரை வாழவைப்பாய்?"
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!
சாதிச் சாக்கடையில் சலிக்கப்பட்டு
சத்தியம் புரியாது புத்திபேதலித்து வீழ்ந்து
சர்வாங்கமாய் நீயின்று - இது
நீண்டால் இனியும் மீளாது தமிழினமது
எதிர்கால மீள்ச்சிக்கு !
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!
ஐந்தாயிரம் அற்ப ரொக்கத்திற்கும்
ஆள்கொல்லும் வெறிநீருக்கும் அடிமையாயி
முத்தான ஐந்து வருசத்தை அடகுவைத்து
தினம் தேவைக்கு நிதமொரு ஆர்ப்பாட்டம்
வீரத்தமிழே வெட்கமாய் இல்லை உனக்கு ?
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!
தொழிலாளர் நலச் சட்டங்களில்
பாதகத் திருத்தம் கேள்விகேட்டால் துப்பாக்கிச் சூடு;
வேளார்களை அகற்றி விவசாயத்தை தனியார் வசப்படுத்தும்
ஆட்சியர்கள் சதித்திட்டம் முதாளிகளுக்காக..
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!
காவிரிப்படுகையில் மீத்தேன்
அனல் மின் திட்டம்
எரிவாயு குழாய், கடற்கரைகளில் அணுமின் நிலை
மதுக்கடைகள், மணல்; இரும்புத் தாது கொள்ளை
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!
_வரிகள்: ஸ்ரீ ஆரோன்_