ஞாயிறு, 13 அக்டோபர், 2024

சிகரம் நோக்கி

துவண்டு துக்கித்து

சோம்பலில் கழிக்கும் நேரமதை

முதலீடாய் கணிப்பதில்லை 

வாழ்க்கை


வளைவுப் பாதை 

பலகாதமாயினும்

அடுத்தடுத்த எதிர்பார்ப்பு

களைப்புக்கு அருமருந்தாகும்


ஏற்றதின் உச்சியில்தான்

வாழ்நாளில் காணாத

அற்புதக்காட்சிகள்

ஒளிந்திருக்கும்


சிகரம் நோக்கிப்புறப்படு

சுகமான இறங்குபாதையின்

தொடக்கமும் அங்கேதான்

உள்ளது!


~~~~~~~~~~~~~~~

வரிகள்: சிறி ஆரோன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...