இது மனிதனை
அதிகாரப்படுத்தும்
மனிதனின் செல்லக்குழந்தை
தீதும் நன்றும்
இரண்டறக்கலந்த
அறுக்கமுடியா மாயவலை
சடத்தை உயிர்க்கவும்
உயிர்களை காவுகொள்ளவும்
இதற்கு இயலுமானதே!
தூரத்தைக் குறுக்கி
நேரத்தைச் சுருக்கி
காலத்தைக் கடந்தும்
இது நகரும்
கடந்ததை மீட்டி
வருவதை கணித்து
கணப்பொழுதில்
உலகை இணைக்கும்
சாமர்த்தியம் இதுவே!
உள்ளங்கையில் நெல்லிக்கனி
இனி அப்பட்டம்,
சோற்றில் பூசணிக்காயை
சுலபமாய் மறைக்கலாம்
நமைத் தாங்கிச்சுற்றிய
பூமியிது நம்கைக்குள்
அடங்கும் மந்திரமே
இணையமெனும் தந்திரம்.
~~~~~~***~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக