வியாழன், 17 அக்டோபர், 2024

தாயின் மடியில்


தாயின் மடியில்

தரணியைக் 

கண்டேன்


அன்பும் 

அரவணைப்பும்

அவளின் பரிபாசை


என்னழுகை

நொடிகள்தானே

அவளுக்கு மரணவலி


தானுறங்கும் நேரங்கூட 

எண்ணமெலாம் 

என்னில்தானே!


சுகமாய் 

நான்தூங்க

என்சுமை தாங்கிடுவாள்


சுகயீனம் 

என்னிலென்றால்

சுகபோகம் வெறுத்திடுவாள்


கண்ணே.. கலைமானே..

செல்லப்பெயர்கள்

கோடிதந்தாள்


கட்டி 

அணைக்கையிலே

உச்சிமுகர்ந்து உருகிடுவாள்


உள்ளத்தில் 

உயர்த்திவைத்து

தன்னுலகம் என்னில்காண்பாள்


என்சீவனுள்ள 

காலமெலாம்

தாயவளைத் தாங்கிடுவேன்

~~~~***~~~~

வரிகள்: சிறி ஆரோன்



கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...