ஒருத்தரும் காணயில்ல
அவயென்னப் பாத்தத
சட்டெனக் குனிஞ்சுபுட்டா
சாவடி நெஞ்சுக்குள்ள!
கன்னத்த உரசிக்குழையும்
காதோர நறுக்குமுடியும்
உச்சியில கொண்டபின்னி
ஆள்மிரட்டும் அருவாப்புருவம்
கூந்தலில் சரம்கோர்த்து
அசைந்தாடும் சிமிக்கிக்கம்மல்
சேலைவிலக்கி எட்டிப்பாக்கும்
அரைச்சாண் இடுப்பு
பல ஆயிரங்கவிதை
இதுவர எழுதியிருக்கேன்..
இப்படிப் பக்கத்தில
ஏங்கூட வந்து நீண்டதில்ல!
உரசப்பற்றும் மூங்கில்போல
கோபக்காரன் நான்
மணப்பெண்ணாய்
அவள் சிரிப்பிலே—பற்றி
எரிகிறேன் பாவமாய்.!
~~~~~~***~~~~~
வரிகள்: சிறி ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக