வியாழன், 17 அக்டோபர், 2024

தன்மானம் - அந்தாதிப்பா


தன்மானம் 

தமிழின

அடையாளக் 

கர்ச்சனை!


கர்ச்சனையிது 

விடுதலைக்கும் 

அடிமைக்குமான 

நடுக்கோடு


நடுக்கோட்டில் 

நிற்பவனை

உற்சாகமூட்டும் 

வலிமை


வலிமை 

அற்பமாய் 

எண்ணப்பட்டன் 

ஆயுதம்


ஆயுதம் 

பாதிதான் 

மீதியது 

இலட்சியம்


இலட்சியந் 

துணிந்தோரை

மன்னராக்கும் 

மகுடச்சொல்


மகுடச்சொல் 

அதுவேதான் 

தீண்டாமை 

ஒழிந்தது


ஒழிந்த 

சாதியம் 

உதவாதினி 

ஒருபோதும்


ஒருபோதும் 

வெல்வதில்லை 

அரிதார 

நாயகர்கள்


நாயகர்கள் 

நீதிநின்றால்

தோற்றதில்லை 

தன்மானம்!


~~~~***~~~~

வரிகள்: சிறி ஆரோன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...