புதன், 16 அக்டோபர், 2024

தன்மானம்


அமைதியும் 

பொறுமையும்

செயலிழக்கும் புள்ளியிதுவே!


முதுகில் 

குத்தும்போது

மூர்க்கந்தரும் சொல்லுமிது


கடந்துபோக 

நினைப்பவனை

சீண்டிவிடும் சினக்கொம்பிது


அற்பமாய் 

எண்ணப்பட்டவன்

சாதிக்கும் சாவியுமென்பேன்


உலகத்தின் 

கொடுங்கோல்களை

பிளந்துபோட்ட சின்னச்சிராய்


தன்னினம் 

தன்மொழி

என்றானவனது மகுடவார்த்தை


தீண்டாமை 

கொளுத்தி

சாதியமொழித்த சொல்லுந்தானே!


குலத்திலல்ல 

மூர்க்கம்

அதுமூழும்குணமான இவ்ருப்பில்தான்


வேசமிடும் 

கபடதாரிகள்

அரிதாரமுகம் கிழிக்குமிதுவே!


நானெனும் 

தமிழனின்

ஆயுதச்சொல்லான தன்மானம்

~~~~***~~~~

வரிகள்: சிறி ஆரோன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...