சனி, 19 அக்டோபர், 2024

குறள்வெண் செந்துறை


தீவினை நீக்கிட 

தேவரீர் வாருமே

நாவினைக் கூட்டியே 

நானழைத் தேனே!

~~~~~~~***~~~~~~

வரிகள்: சிறி அருணன்


*********-***************

“வெள்ளைக் கொம்பனை விரும்பித் தொழுதால்

துள்ளிப் பறந்து துயர மோடுமே!’’

 (பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்)

★★★

கருத்தூன்றுக.

****************

* ஒழுகிய ஓசையும், விழுமிய பொருளும் வெண்செந்துறை யாதலால், கடவுளரின் அருள்வேண்டிப் பாடுவதே பொருத்தமாகும்.

அங்ஙனம் வராத பாடல்கள் வெண்பாவின் இனமாகிய "குறட்டாழிசை "யாகும். (வெண்பாவின் இலக்கணங்கள் தவறி வருபவையும் "வெண்டாழிசை "யாகும்.)

இரண்டிரண்டு அடிகளாக எத்தனை அடிகளாலும் குறள்வெண்செந்துறை எழுதலாம்.

பொது இலக்கணம்

***********************

> நான்கு சீர்கள் கொண்ட இரண்டு அடிகளைப் பெற்று

> ஈரடியும் ஓரெதுகை பெற்று,

> ஒன்றாம் மூன்றாம் சீர்களில் (பொழிப்பு மோனை.) மோனை பெற்று,

> இயற்சீர்களால், (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்)

> ஈற்றடி ஏகாரத்தில் முடிவது *குறள்வெண் செந்துறை* ஆகும்.

விழுமிய பொருளில்,(இறைபாடல்) குறள்வெண்செந்துறைப் பாடல் ஒன்றைக் கருத்துப் பகுதியில் எழுதுமாறு வேண்டுகிறேன். 

வாழ்த்துகளுடன் எனது ஆசான்

பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன் அவர்களது பாடவகுப்பு தொகுப்பிலிருந்து

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...