வியாழன், 17 அக்டோபர், 2024

ஒரு நாயகன்

 

ஒரு 
நாயகனின் எழுர்ச்சி 
அவன் குடும்பத்தை
அதன் சமூகத்தையும் 
உலுக்கும்!

ஆயிரம் 
அவமானங்களில்
முகம் கறுத்து
புதிய மனிதர்கள் 
புதிய மொழிகள் காணும்

திருப்திப்படாத 
நாட்கள் மாட்டி
அடுத்தது என்ன ?
என்ற கேள்விக்குள் 
தினந்தினம் சிக்கித் தவிக்கும்

உதிக்கும் காலை
எதிர்பார்ப்புடனும்
முடியும் நாளன்று
அடச்சே..! 
என்றே இருளும்

இது அதுவென்று
மூளை சொல்லும் 
திட்டங்களை
அனுபவம் திட்டித் தீர்க்கும்!

கால்நடக்க 
நூரம் விளங்காது
கண்பார்க்கும் காட்சிகள் 
புலப்படாது

ஒன்றுவிடாது
மனசு புலம்பித் தீர்க்கும்
முடிவு எட்டியிராது
இறுதியில்

எதையும் நம்பாதே
என்று சொல்லும் 
கடந்தகாலம்
வலியின் மிகுதியால்

இழக்க 
இனி எதுவுமில்லையே
என்று எடுத்துச்
சொல்லும் நிதானம்

தொட்டது 
தொண்ணுறுக்கும்
இலவசமாய் 
ஆலோசனை சொல்ல
யாருமில்லாத வெகுதூரம்

சொந்தப் புத்தி
கூர்மையாகி
புண்ணியமில்லா காரியமும்
படிக்கற்கள் ஆகிடும்

ஓடியோடி உச்சியில்
ஒளிவிளக்காய் 
மிளிரும் போது
ஒதுக்கிவைத்த 
உறவுகளும்
உப்புக்கு சப்பாய்
பெருமை பேசும்

என்ன வாழ்க்கைடா
சாமியிது 
அரசியலில்
இதெல்லாம் சாதாரணம்
என்பதுபோல

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...