திங்கள், 6 ஜனவரி, 2025

சூழ்நிலைக் கைதி


சூழ்நிலைக் கைதியாய்ச்

சுழலிலே நாதியற்று


ஆதரவற்ற தனிமையில்

கதைபேசிப் பயனில்லை/


விதியைக் கடிந்து 

தலையெழுத்தை சபிக்காதீர்/


தடுக்கிப்போன காரணத்தை

கருத்தாய்க் கற்றுக்கொள்/


வென்ற துரோகியும்

மன்னனான வரலாறுண்டு.!


தோற்ற நாயகனுக்கு

பரிந்துபேசிய தடையமேது.?


சாதித்தால் வரலாறு 

உனக்காய் நிலைநிற்கும்/


சிரத்தையாய்ப் போற்றும் 

தூற்றிய நாவுகளும்/


குணசீலன் பெருமகன்

நீயாவாய் சமூகத்தில்/


உற்றவரும் சுற்றவரும்

உவகை காண்பர்/


சூழ்நிலைக் கைதியே

தூங்காதே போராடு.!/


~~~~~~***~~~~~~


சூழ்நிலைக் கைதியாய்ச்

சுழலிலே நாதியற்று


ஆதரவற்ற தனிமையில்

அவலமான கதைபேசிப் 

பயனேது.?


சுமைதாங்கிக் 

கழுதையும் சுமையிறங்கிச் 

சுகங்காணுதல் நிச்சயம்


விதிகடிந்து விட்டதெனத்

தலையெழுத்தைக் குற்றங்கடிந்து

நியாயமென்ன.?


தடுக்கிவிட்ட காலந்தனை

கருத்தாய்க் கற்றுக்

கனிந்துகொள்


வாகைசூடும் 

ஐந்தாம் படையனுக்கும்

முடிசூட்டும் விந்தையான 

மாந்தரிங்கு.!


தோற்றுவிட்ட நாயகனை

விழுங்கிச் செரித்த 

வேதங்களும் நமக்குண்டு.!


வென்றுவிடு அதுபோதும்

அநியாயங்களுக்கும் வரலாறு 

நியாயங் கற்பிக்கும்.!


செம்மை யுற்றானிவன் - என்று

சிரத்தையோடே போற்றிப் 

புகழுஞ் சரிதங்களுனை


தன்மை மாறாக் 

குணசீலன் தற்பெருமை 

பேசாப் பெருமகனென்பர்

தூற்றித் தூசித்தோர்


உற்றவரும் சுற்றவரும்

உவகை காண்பார்

உன்பேரில் நலமானதை


இவ்வரிகள் 

இலக்கோடும் வெற்றிக்கல்ல

சூழ்நிலைக் கைதிக்கேர் 

சுகச்செய்தி.!


~~~~~~***~~~~~~

வரிகள்: சிறீ அருணன்




கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...