திங்கள், 6 ஜனவரி, 2025

புதுவருசம் பொறந்தாச்சு


புதுவருசம் பொறந்தாச்சு

பூமியெல்லாம் செழிப்பாச்சு

              ▪️

கிழக்கால கதிரவனும்

ஒளியோட வந்தாச்சி 

எந்திரிம்மா சீக்கிரமா


கூட்டிப் பெருக்கி 

சாணிமொழுக்கி 

வீட்டப்புதுசா மாத்திடனும்/


பால்பொங்கி அமுதுகிண்டி

இனிப்போட தொடங்கணுமே

வேளையித/


பழங்கத ஏதுமில்ல 

பகுத்திரமான புத்திமதி

கொஞ்சங் கேளுகண்ணு.!/


விரலுக்கேத்தே வீங்கவேணும்

கத்துக்கிட்டோம் போனவருசம்

ஒத்துக்கணும் இந்தவருசம்/


புல்லுப் பூண்டு அதுவுங்கூட

கிழங்குவிட்டுச் சேமிக்குது

ஆறறிவு நமக்கிருக்கே

மீதியேங்க நம்மக்கிட்ட?/


சீட்டுப்போட்ட காசை

வட்டிக்குக் கொடுத்திடாம

வங்கியில வைப்புவையீ.!/


கடந்தவருசோ கத்துக்கிட்டோ

உழைச்சகாசே ஓட்டுமுண்ணு.!

வட்டிக்காசு வரமில்ல

பாவங்கண்ணு வாங்கிடாத.!/


கைமாத்து வாங்கிக்

கோழிக்கறி ஆக்கிடாத

சுண்டலுஞ் சோறும் 

சுகந்தானே.!/


சந்தோசமா வாழச் 

சொர்க்கம் எதுக்குக் கண்ணு.?

சாதிசனத்தோட சார்ந்துபோ

அதுபோதும்/


எங்கம்மா உங்கம்மாண்ணு

இந்தவருசம் பாக்காத

பெத்ததாயில பேதமில்ல

இங்கபாரு!/


அயலுகளை எட்டிப்பாத்து 

அரிசிபுளி தேவகேட்டு

உதவிசெய்யீ குத்தமில்ல.!/


ஓம்புள்ள குத்தஞ் செஞ்சா 

ஊரக்குத்தஞ் சொல்லி

மூடி மொழுகாம…

வாயாலபேசி ஆகலெண்ணா

வாதுமுறி.!/ 


வயக்காட்டு வருமானம்

போதலெண்ணு வெளிநாட்டுத்

தட்டத்தனிச் சீவியம் 

வேணாமடி நமக்கினி.!/


இந்தவருச ஒப்பந்தத்தோட

ஊரோட வந்திடுறன் 

கூளோ கஞ்சியோ..

குடும்பமாச் சேந்திருப்பம்!//

~~~~~~***~~~~~~

புதுவருசம் பொறந்தாச்சு

பூமியெல்லாம் செழிப்பாச்சு/

கிழக்கால கதிரவனும்

ஒளியோட வந்தாச்சு/


கூட்டிப் பெருக்கி 

சாணி மொழுகி/

பால்பொங்கி அமுதுகிண்டி

இனிப்போட தொடங்கிடணு/


பழங்கத ஏதுமில்ல 

பகுத்திரமான புத்திமதி/

விரலுக்கேத்தே வீங்கியாகணு

ஒத்துக்கணு இந்தவருசம்/


புல்லுப் பூண்டுகளும்

கிழங்குவிட்டுச் சேமிக்குது/

ஆறறிவு நம்மதானே

இனியாச்சு ஞானப்படணு/


எங்கம்மா உங்கம்மாண்ணு

ஏத்தமிறக்கம் பாக்காத..

பெத்ததாயில பேதமில்ல

புரிஞ்சிக்கிட்டு போகப்பாரு! /


சந்தோசமா வாழ 

எதுக்குச் சொர்க்கம்.?

விட்டுக் கொடுத்துப்போ

அப்புறமாப் பாருபுள்ள.!


அயலுகளை எட்டிப்பாத்து 

அரிசிபுளி உவந்துகோடு/

உதவிசெய்யீ குத்தமில்ல

வீடுகுந்திப் பழகிடாத.!/


தட்டத்தனியக் கிடக்கிற

அயல்சீம எதுக்கு.!?/

கூழோ கஞ்சியோ

குடும்பமாச் சீவிக்கணு//


~~~~~~***~~~~~~

வரிகள்: சிறீ அருணன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...