திங்கள், 6 ஜனவரி, 2025

உன்னோடு வாழ்வது உவப்பானதே.!

 

என்னுருவை  

உருக்கிவார்த்த 

முதற் பலனே

உயிருறை செல்வமே!

           *

நானிருக்க 

உன்னைத் தொடுமோ 

கண்ணூறும் நாவூறும்?

           *

“அப்பா..” 

என்ற ஒற்றை வார்த்தை

இத்தனை கனத்ததென்று

நீ கூப்பிடும்வரை அறிந்திரேனே!

           *

உன்னைத் தாலாட்டக் 

கோர்க்கும் வரிகளில்தான்

உள்ளார நம்புகிறேன்

நானுமொரு கவிஞனே.!

           *

சுயநலக்காரன்

இவனென்ற ஊரார்

புறணிகள் பொய்யாயிற்று

தலைமகனாய் நீவந்ததால்..

           *

உன்னோடு 

வாழ்வது உவப்பானதே - என்று

கொண்டாடித் தீர்க்கிறேன் 

உறவுகளோடு நித்தம்

           *

பேறுகாலவலி 

மரணத்திலும் கொடிதெனல்

உண்மைதானோ??

தூரத்தில் உன்னழுகை! 

          ***

வரிகள்: சிறீ அருணன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...