திங்கள், 6 ஜனவரி, 2025

தோல்வி - போராடி - வென்றிடு

#தோல்வி போலொரு

தோழனில்லை கற்றுத்தர.!


அற்பமாய் எண்ணப்பட்டவர்

அதிசயங்கள் புதிந்ததுண்டே.!


வெளித்தெரியா வேர்தானே

விசாலத்தின் ஆதாரம்


களிப்புடன் கடந்துசெல்

கண்ணியமற்ற மாந்தரை


புகழைக் கொண்டவன்

#போராடி வாழ்ந்தவனே.!


துக்கித்துத் துவள்பவன்

தோற்றான் என்றாகும்


துரோகத்தின் முகட்டில்

துணிவதே ஆயுதம்


வெட்கம் அவமானம்

வேதனைகள் வெறுவார்தையாம்.!


உறுதியாய்ப் போராடி

உலகிதை #வென்றிடு


~~~~~~***~~~~~~

வரிகள்: சிறீ அருணன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...