திங்கள், 6 ஜனவரி, 2025

கொடை பழகுவீர்.!



பகட்டில்  பரவசப்படும்

பரமின்று  பாரீரோ ?

கொடுக்குங்  கோமகரே

கோரமுகம்  காட்டாதீர்..


வீணான  விளம்பரத்தில்

விடைகாணும்  வீணராய் !

வகைதேடும்  வக்கத்தவன்

வலியென்ன  அறியீரோ ?


விருப்புக்குறி  வினவுகிறீர்

வீதிமகன்  விற்றவயிற்றிலோ ? 

நாதியற்ற  நம்மவர்க்கு

நாமின்றி  நலமேது ?


சாதிசமயஞ்  சாராது 

சார்ந்திடுவீர்  சமையத்தே !

தேதியென்று  தேவயற்ற

தேறாச்சாத்திரம்  தேடாதீர்..


கொடுத்துக்  கொண்டாடுவோம்

கொடைக்கேது கொள்கையிங்கு ?

இடதுகைதானும்  இயம்பாத

ஈகையே  இனிமையென்று.


~~~~~***~~~~~

வரிகள்: சிறீ அருணன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...