வாழ்க வையகமெனச்
சித்தங் கொண்டவர்
சித்தார்த்தன் அவர்தாம்
புத்தனாய் அவதாரம்
அரசபோகம் ஒதுக்கியே
ஆண்டியாய்க் கோலம்
நீளும் சீவியத்தில்
நீட்சியில்லா அன்பால்
வாழும் மனிதர்குலம்
நிலைத் திடனாகவே.!
பேசும் வார்த்தையிலே
இங்கிதம் காத்தவராம்
கொல்லவந்த துஷ்டனை
சீடனாக்கிக் கொண்டே.!
ஞானம் கொடுத்தது
போதிமரம் அல்லவே.!
போதிமரத்தின் கீழமர்ந்த
அவரேதான் ஞானவானாய்
போதனைகள் சாங்கியமாய்
ஓதுதற்கல்ல ஒழுகுதற்கே.!
அவர்வழி இலங்கையர்
அதுமறந்த நெஞ்சோடு..
பெளத்தமத ஆணிவேரே
தர்மமென அறியாரோ.?
~~~~~~***~~~~~~
வரிகள்: சிறீ அருணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக