விலைபோகும் விஞ்ஞானம்
விவசாயத்தை வீணென்றது
நற்காரியமாய் நிதைத்தவை
நன்மைக்கே நட்டமானது
தகமைக்குத் தரணியில்
தகுந்தவேலை தருவாரில்லை
கடந்தகாலக் கனவுகள்
கடனிலே கரைசேர்த்தது
உடனிருந்த உறவுகள்
உதறித்தள்ளி ஊமையானது
இத்தனைக்குமிது அர்த்தமுள்ள
புத்தாண்டென நம்பிக்கையில்.!
~~~~~~~***~~~~~~~~
வரிகள்: சிறீ அருணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக