திங்கள், 6 ஜனவரி, 2025

மறக்கமுடியாத நட்பு

பாடசாலைக் கூரைதனில்
நாம்கலைத்த தேன்கூடும்/
மறுநாள் ஒன்றுகூடலில்
பிரம்படியின் ஓலம்
**
வீடுபோகும் வீதியோரம்
கல்லெறியும் குட்டைகளும்/
கணக்கெடுத்தோம் பேரூந்தும்
மகிழூர்ந்தும் நமக்கென்றே!
**

தென்னைமர ஓலையிலே
பீப்பீப்குழல் பம்பரமும்/
பனங்காய் வண்டிசெய்து
பாரமேற்றும் போட்டியும்
**
இன்றும் கண்ணுக்குள்
திரைகாண்கிறது தோழா/
நெஞ்சுக்குள் நிரந்தரமான
உனதுநட்பு மறவாதே!

~~~~~~***~~~~~~

வரிகள்: சிறீ அருணன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...