திங்கள், 6 ஜனவரி, 2025

உன்னன்பின் நெடுவானிலே.!



நெஞ்சிலாடும் நிலவே

தஞ்சம் நானானேன்
தயவே உன்மடி

~*~
துஞ்சும் என்னுயிர்
துளியுன் கண்ணீருக்கும்.!
வஞ்சிக் கொடியே
வாழ்வே நீதான்.!

~*~
தகையாய் நீயெனக்கு
தெய்வம் கொடுத்தவரம்
நிழலுக்குள் ஒழிந்தவனை
நிஜத்திலே புதுப்பித்தாய்

~*~
ஒளிபடரும் சந்தமே
நிந்தனில் நிலையானேன்
வடிவழகே நலமுனது
நெஞ்சமும் நினைவுகளும்

~*~
கொஞ்சி விளையாட
மைந்தனைக் கொடுத்தவளே.!
எதுவொன்றும் பெரிதல்ல
உன்னன்பின் நெடுவானிலே.!


~~~~~~~***~~~~~~~~

வரிகள்: சிறீ அருணன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...