தாவித்தித்திரிந்தேன் தாகமாக
தாய்மடியில் தவழ்ந்தகாலம்
*
சுற்றித்திரிந்தேன் சுகமாக
சுருக்குநூற்பை சுமந்த காலம்
*
பாடுபட்டேன் பரவசத்தில்
பாவியுன் பார்வைபட்ட காலம்
*
புத்தி புரிந்தேன் நீ எனை புன்னகைப்பில்
புழுதியென்று போன காலம்
*
இத்தனை கடந்து காண்கிறேன்
இன்ப எதிர்காலம் எனக்கு இறந்த காலம்..!
* * *
* * *
[on 31/10/2004, மித்திரன் வாரமலர் (Ceylon News Paper)]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக