வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

உன் காதல்க் கணக்கை தீர்த்தாயோ.?

உன்னை
அளவுகடந்து
நேசிப்பவன் நான்..
அதுபோல்
என்னையும் நேசிக்க மரணமாச்சும்
முன்வந்ததை அறிந்து
அகமகிழ்ச்சி..
ஆனாலும்..
என்னுயிரை
பட்டயம் பெற்ற
உன்னை பிரிந்து
இன்னும் உயிருடன் வாழ்கிறேன்
என்பது பேரதிர்ச்சி..
அட..நீ..
வலியதற்கு எனை
குத்தகைக் கிரையம் செய்து
முடிவு நாளில்..
மரணமதுதனிற்கு
அடிமையாய் கொடுத்து
உன் காதல்க் கணக்கை தீர்த்தாயோ.?

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...