செவ்வாய், 8 அக்டோபர், 2024

தோல்வியில் துவளாமல் துணிந்து நில்..



முழங்கால்கள் வலிக்கும் நடை நிறுத்தாதே!

நெஞ்சம் படபடக்கும் நோக்கில் விலகாதே!

கண்கள் இருண்டு கலங்கிடும் இமைமூடாதே!

தேகமிதுதான் சோர்வுறும் இட்சிய தாகமல்ல.

*


உன்னில் குறைகண்டு இவ்வுலகம் புறம்பேதள்ளும்

இலக்கை மெருகேற்றி நோக்கில் குறியாயிரு

வியர்வை அதுவொன்றுதான் விலைகணிக்கப்படாத செல்வம்

சகலசம்பிரதாயங்களும் உன்கால்கட்டும் வலுகவனம் சிக்கிடாதே!

*


பின்புறமிருந்து தடுக்கிவிட புன்னகைமுகங்கள் பலவுண்டு

தோல்வியில் துவளாமல் துணிந்து நில்

வெற்றிச் சுவையது வலியவனுக்கு மட்டுமன்றே!

விடாமுயற்சியோடு ஓடும் தோல்வியின் தோழனுக்குமே!

***

வரிகள்: சிறி ஆரோன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...