வியாழன், 19 டிசம்பர், 2024

நிலவுக்குள் நீயடி


“காதலிக்கிறேன்” என்றாள்
“உள்ளேவா” என்று
உள்ளிருந்தே சொன்னேன்!

வெளியே வந்தொருநாள்
“நீ இப்போது சரியில்லை
என்னைக் கண்டுகொள்வதே
இல்லை!” என்றாள்!

என் கண்ணாய் நீயிருக்க
“கண்ணெப்படிக்
கண்ணைக் காணும்?”
என்றேன்.!

மறுமொழியாய்..
“கவிதைக் குதிரையில்
சவாரிசெய்ய காதலிக்குசுகம்
கணவாட்டிக்கு அல்லவே.!”

திருமணக்
களிப்புச் சடங்குதான்
காதலுக்கு இறுதிச் சடங்கோ?

“நிச்சயமாய் இல்லை!” என்று
புத்திசொன்னாலும் “அதுதான்
உண்மை!” என்றது அனுபவம்

“சுரிக்குளத்தில் கால்சிக்கிய 
முதலைபோல”
நெஞ்சமோ 
விடையறியாக்
கேள்வியோடு இழுபறியாய்.!

உண்மையான உண்மை
உண்மைக் காதலிலுள்ளான
உண்மைக்கு எப்பொழுதும்
உயிரிருக்கும்!

பிரியலாமென்று முடிவெடுக்கில்
மலையுச்சியில் நிறுத்தி - அது
மயிர்க்கூச்செறிய மீட்டும்.!

கூடியிருந்த நாட்களை..
மகிழ்ந்து சிரித்த நொடிகளை..
பதிந்துவைத்த சுவடுகளை..

உலகின் அதிசயமே
பலகோடிச் சனத்திலிருவர்
“உனக்குநான் எனக்குநீ”
என்னும் பந்தமல்லவா?

இல்லை கேட்கிறேன்..!!
ஒட்டாத சரீரங்கள் ஒன்றாய்ப்
பயணிக்க மரணத்தின் நாளை
நிர்ணயிப்பது சாத்தியமா.?

நிச்சயம் முடியும் - அது
காதலால் மாத்திரமே முடியுமென்று
காதலின் ஞாபகப் பக்கங்களால்
நிரூபணமே!

இருந்தும்..
அவளைக் காணவில்லை
தீர்க்கமாய்த் தேடியும் காணவில்லை
என்னெல்லைக்குள்.!

ஓய்ந்து நான்
உக்கார்ந்தேன்
வெள்ளிபூத்த ஓரிரவு
வானம் பார்த்து
புண்பட்டு நெஞ்சம்
புலம்பியபடி.!

அம்புலியில் அங்கோர்
வெள்ளை நிழல்.!!
அடக்கிராதகியே..!!
எங்கெல்லாம் தேடுக்கிறேன் - நீ
ஒளிந்திருப்பது நிலவின் முதுகிலா.!?

~~~~~~***~~~~~~

வரிகள்: சிறி ஆரோன்



கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...