வியாழன், 19 டிசம்பர், 2024

வஞ்சி விருத்தம்


மண்ணே உன்னில் மாண்டுளன்று
விண்ணே போன வீரமிகோர்
கண்ணே தமிழென் காத்திடவே
அண்ணே என்று ஆர்பரித்தோம்!


~~~~~~*****~~~~~

பாடல்: சிறி அருணன்

                       ********************

ஈடாய் எதுவு மில்லாத

ஏடா யிரங்கள் எழிலூட்டும்

தேடாச் செல்வச் செந்தமிழை

நாடா தோரே நலிவாரே!

                           --பாவலர் மா.வரதராசன்

கருத்தூன்றுக.:

மேற்கண்ட பாடல் "வஞ்சி விருத்தம்" ஆகும். 

மிகவும் எளிதான இவ்விருத்தம் சிந்தடிகளால் (முச்சீர் அடிகளால்) அமையும்.

அளவொத்த சிந்தடிகள் என்பதே குறிப்பு. எனவே இன்ன சீர்கள்தாம் வர வேண்டும் என்ற வரைறையில்லை. எந்த வித அமைப்பிலும் அமைத்து எழுதலாம்.

நாம் பயிற்சிக்கு,

தேமா, மா, காய் என்ற அமைப்பை மட்டும் எழுதலாம்.

பொது இலக்கணம்.

*அளவொத்த மூன்று சீர்கள் கொண்டதாய்,

*நான்கு அடிகள் பெற்று,

* நான்டிகளும் ஒரே எதுகையைப் பெற்றும்,

* முடிந்தால் பொழிப்பு மோனை பெற்று (கட்டாயமில்லை) (சான்று பாடலில் வந்துள்ளதைப் பார்க்க) 

வருவது "வஞ்சி விருத்தம் " ஆகும்.

ஓரடிக்கு, முதற்சீர் தேமாவாகவும், இரண்டாம் சீர் தேமா, புளிமா இவற்றில் ஒன்றும், மூன்றாம் சீர் காய்ச்சீர் ஏதாவது ஒன்றும் (ஒரே வகைக் காய்ச்சீராய் இருந்தால் சிறப்பு) சீர்கள் அமைதல் வேண்டும்.          

--பாவலர் மா.வரதராசன் ஆசானின் பாடவிதானம்__

                       ★★★

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...