நாளும் மனிதரிங்கு தங்க
இல்லாப் பிரிவினைகள் சூட - மாண்பு
இங்கே எதுவாக நீளும்?
வரிகள்: சிறி ஆரோன்
******************
அஞ்சி யடங்காத வாழ்வை - என்
அன்னை எனக்கருள வேண்டும்
கொஞ்சு தமிழ்மறந்த போதே - கொடுங்
கூற்றுக் கிரையாக வேண்டும்.
- பாவலர் மா.வரதராசன்-
கருத்தூன்றுக :
மேற்கண்ட பாடல் வகை "முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து"ஆகும்.
அளவொத்த மும்மூன்று சீர்களைக் கொண்ட இரண்டடிகள் என்பது இதன்பொருள்.
அளவொத்த என்பதனால் முதலடியில் அமையும் விதத்திலேயே இரண்டாமடியிலும் சீர்கள் அமைய வேண்டும்.
இரண்டடிகளும் சமமான சீர்களைக் கொண்டிருந்தால் அது 'சமனிலைச் சிந்து' என்றும், சமமற்ற சீர்களைக் கொண்டிருந்தால் அது ' வியனிலைச் சிந்து' என்றும் குறிக்கப்படும்.
சான்று பாடல். . .
மா/காய்/மா என்ற ஒழுங்கில் அமைந்த சமனிலைச் சிந்து ஆகும். (பயிற்சி ஒழுங்கிற்காக இதையே நீங்கள் எழுதவும்)
பாரதியாரின்
ஓடி விளையாடு பாப்பா .. .
வெள்ளை நிறத்தொரு பூனை....
மலரின் மேவுந் திருவுடையாள் ...
போன்றன இவ்வகையே.
மிகமிக எளிதானது இந்தப் பாடல்வகை.
பொது இலக்கணம் :
********************
மேற்கண்ட பாடலின்படி...
* மூன்று சீர்களைக் கொண்ட இரண்டு அரையடிகளைக் கொண்டது ஓரடி.
* அஞ்சி ...என்பது முதல் வேண்டும்...என்பது வரை ஓரடி.
கொஞ்சு... என்பது முதல், வேண்டும்...என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டும். (அஞ்சி, கொஞ்சு)
* 1- 4 ஆம் சீர்கள் அதாவது மடங்கிவரும் அரையடியில் மோனையால் இணைந்து (அ,அ, - கொ, கூ)
* முதலிரு சீர்களும் வெண்டளை அமைய வேண்டும்.
- பாவலர் மா.வரதராசன்-
ஆசானின் பாடவிதானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக