மிளிர்கிறது வானெங்கும்
மனிதனாய்ப் பிறந்த
மாமனிதர் இறுதியூர்வலம்
போற்றுதற் குரியோர்
மனதில் மண்டியிருப்பதில்லை
பிறன்மீது பொறாமை வஞ்சகம்
நெஞ்சது அழுக்குண்டோர்
அடைவது ஆயிரமிருப்பினும்-இவர்
நல்லினம் என்றாவதில்லை
ஞானமாய் நட்புநாடு
கூடும் இடம்பார்த்தே
அளவிடும் சமூகம்
இன்னார் இவரென்று!
செய் தொழிலிலில்லை
குலங்கோத்திர பேதம்
வாய்மொழியில்தானே!
செம்மையான சிந்தனையும்
செயலும் வாழ்க்கையில்
நற்பெயர் சூழுச் சிறக்குமே!
நன்மக்கள் வாழ்த்திடில்
அழகுறும் நோக்கமும்
எதிர்கால சந்ததியுமே!
காரியம் வாகைசூடும்
வளமுள்ள உள்ளங்கள்
தாமுவந்து ஈனும்
கொடைதனிலே!
கொடுத்தே சிவந்தகைகள்
குறைவுகண்டு கைவிரித்து
வானம்பார்க்க ஏற்கார் தேவரீரே!
பஞ்சம் பட்டினிக்கு
குறைவில்லைப் பூவுலகில்
கையிருப்போர் கஞ்சராய்
மனது குறுகியிருக்க!
கஞ்சரிவர் உலகையே
ஆதாயங் கொண்டும்
வெறுங்கையே மூடுவர்
இறுதி ஊர்வலத்தில்!
பல்லாக்கு பகட்டுகளும் வெறுத்த
மனிதருள் மாணிக்கங்களை
வானவேடிக்கையோடு
கொண்டாடி மகிழ்வோம்.
~~~~~***~~~~~
வரிகள்: சிறி ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக