புதன், 13 ஆகஸ்ட், 2014

நான் தோற்றபோது..!


நேற்று கூடவே இருந்தவர்
இன்று எதிரிகள் ஆகி;
காலையில் சுகம் கேட்டவர்
இரவுபோழுத்தில் துரோகி ஆகி..


பல நண்பர்களிற்கு
என் பெயர் மறந்து போனது;
என் உறவினர்களிட்கு
என் முகவரி மறந்து போனது..

கடந்த நாளிகையில் கட்டியணைத்தவர் நகரும் நிமிசமே
மீதியையும் களவாடி மறைந்தனர்..



உன்னை என்றும் கைவிட மாட்டேன்
என்று கைபிடித்த  உறவிற்காய்
கோவணம் வரையில் பட்டா கொடுத்துவிட்டேன் -

அந்த  கைபேசியும்
பதிலற்று ஊமையாகி போனது
விரைவில் தொடர்பு எல்லையை தாண்டிவிடலாம்
என்கிறது பட்டறிவு..!

உதவி என்று ஒரு வார்த்தை கேட்டால்
உள்ளவரும் நடுத்தெருவிற்கு வந்துதான்
மறுவார்த்தை பேசுகிறார்..

எனக்கு கடன் பட்ட அத்தகையோர்
கூழுக்கும் வக்கத்ததாய்
சோர்ந்தே பதில் பேசுகிறார்..

இறுதியாய் நான்
வாழ்ந்து கெட்ட அனுபவத்தோடு
மீண்டும் வாழ்கையின் மீதியை  பார்த்துவிட  துணிந்துவிட்டேன் !


கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...