தோள்தனி லென்தலை சாய்ந்திட
எத்தனை வல்லிய பாடுக ளோ
தென்னவன் அன்பினுள் அப்பழுக் குக்காணேன்
தீராஅன் பிற்குழை யுந்தன யன்
-பாடல்: சிறி ஆரோன்-
~~~***~~~
மேற்கண்ட பாடலில்,
🔷ஒவ்வொரு சீரிலும் மூன்று எழுத்துகள் (ஒற்று நீக்கி) உள்ளன.( க ண ணி ) ( மா ய கு ) ( று பு க) ( ளை க டா) ( க க டா ) (ந மு ள ) ( தி தி கு )
🔷8 ஆம்சீர்கள் ஓரெழுத்தே இருந்தாலும் (மே**) (மே**இரண்டு எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும் (நீட்டிப் பாட வேண்டும்) . நீண்டிசைக்கும் எழுத்து *குறியிட்டுள்ளதைக் காண்க. (பாடலை எழுதும் போது குறியிடத் தேவையில்லை. புரிவதற்காகப் போட்டுள்ளேன்.)
🔷நான்காவது சீர் சிறுகோடிட்டுத் தனிச்சொல் பெற்று வருவதுமுண்டு. அதை மூன்றாம் சீருடன் இணைத்துப் பாடுமாறு அமைதல் வேண்டும். (செந்தமிழ் நாடெனும் போதினி லே - இன்பத்,
🔷இதில் இன்பத் எனும் தனிச்சீரை லே எனும் மூன்றாம் சீருடன் சேர்த்துப் பாடுமாறு அமைந்ததைக் காண்க)
🔷இருகுறில் இணைந்த சீரால் அடி தொடங்குதல் முன்னோர் பாடல்களில் உண்டு. ஆயினும் அது சிறப்பில்லாதது. நாம் நெடில், நெடிலொற்று, குறிலொற்று இப்படியான சீர்களைக் கொண்டே முயலலாம்.
🔲பொது இலக்கணம் :
மேற்கண்ட பாடலின்படி...
🔶ஓரடிக்கு மூன்றெழுத்துச் சீர்கள் எட்டு வரவேண்டும்.
🔶 இரண்டடிகளும் எதுகையால் இணைந்து ( கண்ண, வண்ண )
🔶 முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து ( க , க) (வ, வா)
🔶அடிகளின் எட்டாம் சீர் ஓரெழுத்தே கொண்டு( மே ) (மே)
வகைபடுதல்: ஆசான் பைந்தமிழரசு பாவலர் மா.வரதராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக