சனி, 31 ஆகஸ்ட், 2024

தற்பெருமை


தற்பெருமை பேசிடும்

ஞானத்தில் நெறிப்படார்/

நெறிப்படார் இவரெலாம்

வார்தைகளில் வல்லவராம்//


வல்லவராம் பார்வைக்கு

அரிதார நாயகரே/

நாயகராய் எதுவொன்றும்

தகுதியூன்றி செயற்படார்//


செயற்படார் ஆற்றல்

வார்த்தையின் வெளியரங்கம்/

வெளியரங்கின் பொம்மலாட்டம்

களைந்திடில் கற்பனையே//


கற்பனையில் தான்மட்டும்

தரணியை ஆண்டிடுவர்/

ஆண்டிடுவர் சுயரூபம் 

வெளிப்படும் அதுவரையில்//


அதுவரை சுற்றங்கொஞ்சம்

பொறுத்திடுமே பூன்னகைத்து/

பூன்னகைத்து வாழ்வோங்க

தற்பெருமை தக்கதன்றே//

***

வரிகள் சிறி ஆரோன்

(அந்தாதிக் கவிதை)

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...