புதன், 26 மே, 2021

பாரந்தான்..

மழலையது பாரந்தான் 
மாற்றாந்தாயிடம்
மண்டியிட..

இளமையாது பாரந்தான் 
வறுமைதனில்
வளரும்போது..

கல்வியது பாரந்தான் 
மனசில் சஞ்சல-மது
ஒட்டிக்கொள்ள..

காதலது பாரந்தான் 
கணக் கொண்ணா
கற்பனைதனில் அமிழ்ந்திருக்க..

மதமதும் பாரந்தான்
நெறிமுறையற்ற
ஜீவியத்தில் முற்பட.. 

உறவுகள் பாரந்தான்  
வாய் வார்த்தைகள்
தடுமாறினால்..

குடும்பவுறவு பாரந்தான் 
ஒழுக்கசீரன்பு
ஊடலில்லாதுபோக..

எத்தொழிலும் பாரந்தான் 
பொறுமையும், விசுவாமும்
தூரமானால்..

ஊணுடலும் பாரந்தான்  
உன் பழக்கவழக்கங்கள்
தேகத்தை பாழாக்க..

வாழ்க்கையது பாரந்தான்    
சிரஞ்சீவிய வழிகள் 
தடம் மாறினால்..

_வரிகள்: ஸ்ரீ ஆரோன்_

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...