இல்லாத மாந்தருக் கீந்திடில் எந்தன்
வல்ல இறையோன் வாழ்த்துகாண்
எல்லா வளமுற நலமாய் வாழி
~~~~***~~~
வரிகள் சிறி ஆரோன்
பொது இலக்கணம்
**************************
✅நான்கு சீர்களைப் பெற்றுவரும்.
✅ஆசிரியவுரிச் சீர்களான மாச்சீர், விளச்சீர்களைப் பெற்றுவரும். சில காய்ச்சீர்களும் வரலாம். அவை மாங்காய்ச் சீராக மட்டுமே வரும். (பயிற்சியென்பதால் வாராதிருத்தல் சிறப்பு.)
✅மூன்றடி சிற்றெல்லையும், வரையறையில்லாப் பேரெல்லையும் உடையதாய், ஈற்றயலடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய் வரும்.
✅இரண்டடிகளுக்கு ஓரெதுகையும்,
✅ஒவ்வோர் அடியிலும் பொழிப்பு
✅மோனையும் பெற்று வரும். (முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் அமைவது பொழிப்பு மோனை எனப்படும்.)
✅ஈற்றடி ஏகாரத்தில் முடியும். ஓ, ஆ, ஆல் என்றும் வரலாம். ஏகாரமே சிறப்பு.
~~~~***~~~~
பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன்
(ஆசானால் தொகுக்கப்பட்டது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக