சூம்பிப்போன
இலங்கைதீவில் செஞ்சுடர்
நல்லுதயம் மெது மெதுவாய்..
*
இருட்டுக் குகையிலிருந்து
ஒரு கலைஞன் காணும்
ஒளி வெளிப்படும் அழகு!
*
முட்டிக் கால்வரை
கம்பிகள் தடைதெரியும்
அது சட்ட இறுக்கங்களின்
நல் உவமையாய்!
*
உச்சியில் கோணிய
துருப்பிடித்த பழைய கம்பியொன்று
மதவாதக் கொள்கையாய்
கண்டாலும் பறவாயில்லை!
*
பேரொளியது
பொருளாதார வெறுமைச் சமுத்திரம்
ஊழலெனும் மலை முகடுகள்
தாண்டி வந்தடையும் நிச்சயம்
*
நமது தேசத்தின்
உருவம் சீராகும் சீக்கிரமென்று
உறுதியோடு காத்திருப்போம்
உழைப்பவன் வழிசார்ந்து!
***
கவிவரிகள்: சிறி ஆரோன்
நன்றி புகைப்படம் சகோ ரஜினி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக