திங்கள், 23 செப்டம்பர், 2024

“கேளடி கண்மணி..”


கேளடி கண்மணி..

பெண்டீர்தம் அடிமைச் சாசனம்

தானாய் மறியதல்ல/


ஒற்றொற்றயாய்

கூடிக் கற்றையாகி

ஒடுக்கிய சங்கிலிகள் நொறுங்குண்டன/


கள்ளிப்பால் விரையக் 

கணக்கெழுதிய வீணர் முகண்டதும்

தாய் மார்பில்தான் கவனமடி!/


வேட்டைக்கு இலக்கணம்

பிடரிமயிரும் கர்ச்சனையுமோ

சோழ மாதேவிகட்கு நிகரேது சரிதத்தே/


மங்காத அவ் ஓர்மம்

ஈழத்தில் கண்டீரே

வீர மங்கையராய் முப்படையும்

கட்டியாண்ட பேரழகில்/


தோல்விதழுவி மூலை முடங்க

வெறுங்கதையல்ல பெண்ணியம்

படைப்பின் சக்தியடி/


பஞ்சாங்கக் குறிப்பெடுத்து

கால்க்கட்டு வாய்க்கட்டுக்கு

பகலவன் சந்திரனல்ல சொல்லடி/


பேதமைகள் தள்ளிப் புறப்படு,

சம்பிரதாய சாங்கியப் பூச்சாண்டியோ-அட

புயலைத்தடுக்க பூனைச் சகுனமா?/

 

கொட்டுகிற அருவியில் பாசியேது?

எண்ணம் ஏற்றமுற ஓடு

வண்ணங்களில் வானவில்லில்

சலனமிரா/


சுயநலக் கொழுந்தீ

உளநலம் பொசுக்கி 

நல்லேதும் மீந்திரா சாபமென்று

நடைபழகு/


தேவைக்கு மீந்தது கொடு,

கேட்பின் சாட்சியில்லாது கொடு

வறியோரென்கில் வானளந்து கொடு,

அள்ளத்தானே நீரூறும்/


பூச்சியம் ஒன்றிடத் தகுதியேது?

முகஞ்சுழித்தல்லவே இனிமை

அன்பில் சேர்ந்திட விட்டுக்கொடு/


பொறுமைச் சாயல் 

பலவீனம் என்பர் மூடர்

அருந்தவத்தோர் சகலரும்

நேரத்தைக் காணித்தவரே/


புறம்பேசும் மனுசரோடே அறங் கேளாதே

அவர் தடங்கூர்ந்து விலகுதல் சாலம்

ஞானக்கண்ணே/


கண்ணியம் சமூகக் கடவுச்சொல்லடி

சிற்பியின் கையில் சாணைபிடித்த

உளிக்குச் சாமானம்/


சுய கட்டுப்பாடது சாவியாம்

நல்லாயுள் நின்மதிக்கு

வாழும் கலையில் வாகைசூடி

தரணியில் செம்மைப்படு கண்மணி/


~~~

 வரிகள் : சிறி ஆரோன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...