திங்கள், 23 செப்டம்பர், 2024

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"


மொழியதன் இருகண்ணாய் 

எண்ணும் எழுத்தும் 

சூடினார் ஒளவை


விழிப்புலனில்லா மூளை 

இருள்சீவியம் போல 

இவ்விரண்டில்லா மொழி


சரீரத்தின் விளக்காய் கண்ணிருக்க 

இவைகாணும் மொழியும் 

காலங்கடந்து ஒளிருமே


எண்ணறிந்தே 

மானுடம் அறிவியலை 

நல்ஈவாய் பெற்றது


கணித்து அறியிலேல் 

விஞ்ஞானமே கண்டிராது 

இப்பிரபஞ்சம்


பகுத்தறிவு தன்னை 

நிரூபித்த முதலாதாயம் 

எண்ணெழுத்தே


பட்டறிவை உருவேற்றி 

உசார்துணை கொண்டிட 

இவ்விரண்டே மூலம்


மனிதக் கற்பனைகள் 

உயிரேகிய சாரமே 

எண்ணும் எழுதுமல்லவோ


ஆகாயத்திற்கு அஞ்சிய மனிதன் 

அதை அளந்ததே 

கணிதம் கொண்டே


வரலாறு என்றொன்று 

வழக்கம் கொண்டதே 

எழுத்தின் மூச்சில்


ஆதியோன் 

நஞ்சையும் உணவையும் 

பிரித்தறிந்தும் எழுதானாகில் 

ஏது மருந்து


சாண் முளம் பாகம் மென்றவன்

எண்ணாற்றல் ஞானமே 

அண்டவெளியில் சஞ்சாரம்


கல்லிலும் ஓலையிலும் பழகி

கணினியிலும் காற்றிலும் 

காரியமாகுது 


பகுத்தறிவே 

சிந்திக்கும் பேசுமென்ற 

சாங்கியம் தகர்ந்து - இன்று

இரும்பில் நுண்ணறிவு


வானிலை காலநிலை 

நொடியில் கணிப்பதும் 

கண்ணென எண்ணதைக் 

கண்டதாலே


அன்று தமிழரசி 

முன்னறிவித்த வார்த்தை 

வானளாவி ஆழியீறாய் 

ஆள்கிறது இன்று


வரிகள்: சிறி ஆரோன்

எனது மனமார்ந்த நன்றி

ஈழத்து வளர்ந்துவரும் எழுதாளர் கழகம் 

மற்றும் நடுவர் கவிஞர் மன்னனூர் பாரதி



கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...