வியாழன், 22 செப்டம்பர், 2022

பற்றம் பரமேறிய ஆங்கு..

அற்ப அஞரது ஆதாயித்து 

அறுதொழில் கோணாது பேணியவர்

சாப அமரக்கமறுத்து ,

அற்கா பேரின்பப் பரமனின் குழவியவர்

நம்மால் பிண்டமற நொறுக்கப்பட்டு

நம்மில் சீவனானவர்  நமக்காய்..

பாவமேற்று நிந்தனையுற்றேக..

தேவமிழ்தங்கொண்டு அல்லல் அளறறுத்து

ஒப்பிலா சீரணித்தவர் அதனாயமாய்

ஆசிலா அற்று.. அற்று.. அவியுணவாய்

பற்றம் பரமேறிய ஆங்கு ஆக்கமே என்யேசு.!

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...