வெள்ளி, 1 செப்டம்பர், 2017

❤ காதல் ❤


















மனிதத்தின்
முதல் புரட்சியின்
பெயர்தான் ''காதல்'' 
இது குருதி சிந்தாது
மனிதன் தன்னை பிறநிட்க்குள்
உணரும் புனிதமான முயற்ச்சி..

ஆதாமும் எவாழும்
உலகஜீவன்களை பிரசவிக்க - இந்த
அணுவால் உருப்பெறாத
மகாஅண்டப்  பிரவாக
வார்த்தைதான் ஆதாரம்

இது உறவுகளில்
உருவமில்லா உயிருணர்வு
வார்த்தைகள் சொல்லாத
பொருளத்தனையும்
இதுதரும் வலியின் வீரியம்
சொல்லிவிடும்

இது ஆத்மார்த்தமான
அன்பின் இனொரு நாமம்
ஐம்புலங்களற்றும் ஆத்மாவை 
ஒரு பிண்டத்திட்க்குள்
அடக்கிவைக்கும் மந்திரச்சொல்

ஐயும்பூதங்களையும் அடக்கி
மந்திர மாந்திரீக - மெய்ஞ்ஞானம்
எந்திர தந்திர - விஞ்ஞானமில்லாது
எந்தவொரு ஜீவனும்
அண்ட சராசரங்களையும்
அமானுஸ்ய சஞ்சாரங்களையும்
தாண்டிப் பயணிக்க எத்தனிக்கும்
ஒரேயொரு பரம வார்த்தை
இதுவொன்றுதான் இங்கு.!

எதிர்ப்பாலிரண்டு  கண்ணியமாய்
ஒன்றுகூடும் இயற்கயின்
ஈடிணையற்ற வரம் - இது
ஜீவன் உடலிட்க்குள்
இருந்தும் - இறந்தும் பரம்பரிக்கும்
நாமிட்ட சுவடுகளை - நாளை
வரலாற்றுக் காவியமென்று.!
                                                                                                   
 ❤❤❤
வரிகள் 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...