செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

காதல் புரட்சியாளன் நான் !



அழகிய ''லெனின்கிராட்'' நீயானபோது
ஆரோன் -ஸ்டாலின்தான் நானங்கே,
நாஸிவேசத்தார் மாண்டொழியும் வரை..
காலனாவேன் கால் மாக்சின் சோசலிசம் பூண்டு.
***

என் பெண்மணியேனுன் உரிமைகள்
யாரேனும் பறித்திட்டால்
இருபத்தியோராம் நூற்றாண்டின்
சி/சீனம் கொண்ட சிலாகியன்
மாவோ  சேதுங்காவேன்   செங்குருதி தோய்ந்து.
***

உன் சுயமரியாதையும், சுதந்திரத்திரமும்
பறிபோகுமிடத்து பார்கோனானாலும்
பணிந்திடாது வேடம் பிரசவிப்பேன்
வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகி
என் இனியவளிட்கு ஈழம் கேட்டு.
***

சந்தன வனமான உன்தேகம் சுருங்கிட்டாலும்
அதையும் தழுவியே ஜீவித்திடுவேன்
எனக்கான எத்தனை ஜென்மமோ-அத்தனையும்
சத்திய மங்கல தமிழ்ச் சாணக்கியன் வீரப்பன்போல்
***

உன் கருங்கூந்தலிட்குள் நரைவிழுந்தால்
வயதானதென்று சமரசமாய்டேன் நெஞ்சோரம்
கருச்செம்மல் நெல்சன் மண்டேலாவாய்
காலமெலாம் போராடுவேன் கரு-மை கையேந்தி.
***


நீயென்  மணாட்டியாய் இருந்தபோதும் 
உனைப்  ''பெண்சாதி'' என்று
வார்த்தையிலும் சாபம் பூணாத 
அம்பேத்காரின் சாதி, தீண்டாமையின்
கருத்துளர்  கண்ணியவான் நான் 
***

என் தாத்தன் கம்பக்கவி 
தமிழ் வார்த்தை ஜாலங்களில் 
எவர்க்கும் ஒப்பாத பேராற்றலின்
மகாபிரளயக்காரன் ஆயினும் 
''சீதையெனும்'' பாத்திரத்தை
அப்படியாய் படுத்தியதால் அப்பப்போது 
எங்களுக்குள் கருத்துப்பிரளயம் கூடும் 
அதுவும் உனக்காகவே தானடி .!
***

என் (இல்)லத்தின் பூமியானவளே
உனக்கான என் பட்டயம் பறிபோனால்
சேகுவேரா தோழர் வீரமேந்தி
வல்லாதிக்கம் வெல்லோண்ணாதிருப்பினும்...
உயிர் பிரியும் இறுதிக்கணமும்
உன்மடியதுதான் தஞ்சமாவேன்.!

***

ஸ்ரீ ஆரோன்



கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...