வெள்ளி, 25 ஜூன், 2021

மனம்போல் வாழ்க்கை


கோயிலுக்குள் புனிதமாக
தெய்வம் இருப்பதுபோல்
நமக்குள் நற்சிந்தனை, இன்செயல்
விடாமுயற்சியும் நிலையிருந்தால் 
பக்தர்கள் கோயிலை நாடுவதுபோல 
நம்மை ஐசுவரியம் கூட நி(ன்/ம்)மதியும் நாடும்.!

மாறாக.. 
புறங்கூறல், வஞ்சகம், பொறாமை
பொய்நாவு, அவபக்தியான.. 
துர்க்குணங்கள் உளோர் ஐசுவரியனாயினும்
கோயில் அலங்கவாசலில் ஒண்டியிருக்கும்
ஆண்டிக்கு ஒப்பான தரித்திரராய் - தேவசன்னிதியில்.!

_வரிகள் ஆரோன் _

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...