நான் வரும்போது
கேட்டு வந்ததாய்
ஞாபகம் இல்லை
என் தாய், தந்தையை
இன்னாரெண்டு...!
எனக்கு சகோதரிகள்
இவ்விப்படி என்று
எனைப்பெற்றோர் அனுமதி
கேட்டதில்லை..
இப்படித்தான்
நானாவேன் என்றும்
என் ஆசான்கள்யாரும்
சொன்னதுமில்லை..
இவள்தான் என்னோடு
இறுதிவரை சயனிப்பவள்
இவளின் மெய்யுணர்
என்னில் ஏதானது
என்பதை என்னால்
தப்பிதம் காணவும்
இயலவில்லை..
ஓரிரு காலம் உருண்டோட
மருண்டிருத்த மனசு
விழித்தகணம் அழுதது
ஒப்பாரி ஓலம் !
ஒரு சாவிலும் கொடூரமான
சாபம் என்னிதயத்தில்
சர்ப்பமாய் சுற்றி
சாக ஒப்பாது - சகிக்கவும் கேட்காது
சரீரம் சடமாய் அலைவது கண்டு
பின்ப்பிரபஞ்சம் காசு பற்றாது
கணப்பொழுது தாணும்
எனைச் சுமக்க
திராணியிலாதது என்பதில்
என் ஆத்துமா
அளவற்ற திண்ணமானது
அதன்பெயரில்
நன்னிலம் பற்றி
நானும் தெம்புக்காண..
நம்பி நம்பியே
ஏத்திழியரின் வசிய வார்த்தைகட்கு
என்னிதயம் ருசியானது
வயசுக்குள் மட்டுப்படாத
வழக்குகளும்-இழுக்குகளும்
அடுக்கடுக்காய் பா(ர/வ) சுமையானது !
உறவுகள் என்று சொல்லியும்
சில கொழுத்த முதளைகள்
என் வியர்வையும் குருதியும்
கலந்த சம்பாத்தியந்தனை
சகசமாக சவட்டிக் கொண்டார்கள்
ஊராரை நம்பமறுக்கலாம்
உற்றானையுமா நம்பலாகாது ??
இதயம் இறுகிப்போனது - இந்த
உடன் மனையாளோடு
உயிற்ற காசுக்காய்
மாற்றான் சயனிக சம்மதிக்கும்
சாக்கடை மனிதர் மீதினில்
சஞ்சரிப்பது அத்தனை
சுலபமாயிடுமோ ?
இருந்தும்...
எனில் நானறிந்த
இயலுமை - இயலாமை,
ஏமாற்றம் தந்த
எண்ணொண்ணா அனுபவங்கள்,
வழிகள் சொன்ன வலிகள்
அதற்கன ஒளஷதங்கள்,
மனிதரை புரிந்துகொள்ளும் ஜாலம்,
சொசு கிட்டினால்
கொஞ்சம் சோகம் மறந்த ஆறுதல்,
புழுதியில் தூற்றினாலும்
ரோஷம் தொலைத்த புன்னகை,
தாங்கொண்ணாக் கோபங்கள்
உள்ளிருந்தும் நிறைமாதக் கர்ப்பிணியின் தவம்,
நிஜம் தெரிந்தும்
நிழலை நம்புவதான பாவனை
இத்தனையோடு..
மாற்றுப் பாதை புரியாது
மாற்றம் வேண்டி அலைகிறேன்
என் துணையவளோடு துணிகரமாக..
''கண்போனால் என்ன ?
கையிருக்கிறது !
தடவித் தடவியாச்சும்
கடந்து செல்வேன்
எனக்குரிய நாள் வரும்வரையில்''
ஆக.. நன்றி இறையானே.
ஸ்ரீ-ஆரோன்
கேட்டு வந்ததாய்
ஞாபகம் இல்லை
என் தாய், தந்தையை
இன்னாரெண்டு...!
எனக்கு சகோதரிகள்
இவ்விப்படி என்று
எனைப்பெற்றோர் அனுமதி
கேட்டதில்லை..
இப்படித்தான்
நானாவேன் என்றும்
என் ஆசான்கள்யாரும்
சொன்னதுமில்லை..
இவள்தான் என்னோடு
இறுதிவரை சயனிப்பவள்
இவளின் மெய்யுணர்
என்னில் ஏதானது
என்பதை என்னால்
தப்பிதம் காணவும்
இயலவில்லை..
ஓரிரு காலம் உருண்டோட
மருண்டிருத்த மனசு
விழித்தகணம் அழுதது
ஒப்பாரி ஓலம் !
ஒரு சாவிலும் கொடூரமான
சாபம் என்னிதயத்தில்
சர்ப்பமாய் சுற்றி
சாக ஒப்பாது - சகிக்கவும் கேட்காது
சரீரம் சடமாய் அலைவது கண்டு
பின்ப்பிரபஞ்சம் காசு பற்றாது
கணப்பொழுது தாணும்
எனைச் சுமக்க
திராணியிலாதது என்பதில்
என் ஆத்துமா
அளவற்ற திண்ணமானது
அதன்பெயரில்
நன்னிலம் பற்றி
நானும் தெம்புக்காண..
நம்பி நம்பியே
ஏத்திழியரின் வசிய வார்த்தைகட்கு
என்னிதயம் ருசியானது
வயசுக்குள் மட்டுப்படாத
வழக்குகளும்-இழுக்குகளும்
அடுக்கடுக்காய் பா(ர/வ) சுமையானது !
உறவுகள் என்று சொல்லியும்
சில கொழுத்த முதளைகள்
என் வியர்வையும் குருதியும்
கலந்த சம்பாத்தியந்தனை
சகசமாக சவட்டிக் கொண்டார்கள்
ஊராரை நம்பமறுக்கலாம்
உற்றானையுமா நம்பலாகாது ??
இதயம் இறுகிப்போனது - இந்த
உடன் மனையாளோடு
உயிற்ற காசுக்காய்
மாற்றான் சயனிக சம்மதிக்கும்
சாக்கடை மனிதர் மீதினில்
சஞ்சரிப்பது அத்தனை
சுலபமாயிடுமோ ?
இருந்தும்...
எனில் நானறிந்த
இயலுமை - இயலாமை,
ஏமாற்றம் தந்த
எண்ணொண்ணா அனுபவங்கள்,
வழிகள் சொன்ன வலிகள்
அதற்கன ஒளஷதங்கள்,
மனிதரை புரிந்துகொள்ளும் ஜாலம்,
சொசு கிட்டினால்
கொஞ்சம் சோகம் மறந்த ஆறுதல்,
புழுதியில் தூற்றினாலும்
ரோஷம் தொலைத்த புன்னகை,
தாங்கொண்ணாக் கோபங்கள்
உள்ளிருந்தும் நிறைமாதக் கர்ப்பிணியின் தவம்,
நிஜம் தெரிந்தும்
நிழலை நம்புவதான பாவனை
இத்தனையோடு..
மாற்றுப் பாதை புரியாது
மாற்றம் வேண்டி அலைகிறேன்
என் துணையவளோடு துணிகரமாக..
''கண்போனால் என்ன ?
கையிருக்கிறது !
தடவித் தடவியாச்சும்
கடந்து செல்வேன்
எனக்குரிய நாள் வரும்வரையில்''
ஆக.. நன்றி இறையானே.
ஸ்ரீ-ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக